ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய காகிசோ ரபாடா.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் விளையாடுவது சந்தேகம்..!
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த காகிசோ ரபாடா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவரான காகிசோ ரபாடா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதால் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 3ம் தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு சொந்த காரணங்களுக்காகச் சென்ற ரபாடா அதன்பின் இந்தியா வரவில்லை. கடந்த மார்ச் 29ம் தேதிக்குப்பின் எந்த ஆட்டத்திலும் ரபாடா விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்கா சென்ற ரபாடா எப்போது இந்தியா வருவேன் என்பதையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கிரிக்இன்போ தளத்துக்கு கிடைத்த தகவலின்படி, “தென் ஆப்பிரி்க்காவில் கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடந்த டி20 போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணியில் ரபாடா இடம் பெற்றிருந்தார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையின் முடிவுகள் இப்போது வெளிவந்தன, அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து, இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அபார பந்துவீச்சால் CSK-வை சுருட்டிய RCB... த்ரில் வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முதலிடம்!!
இந்நிலையில் காகிசோ ரபாடா சார்பில் தென் ஆப்பிரிக்க கிரக்கெட் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரபாடா தனது செயல்களுக்கும், பாதியிலேயே விலகியதற்கும் மன்னிப்புக் கேட்டுள்ளார். ரபாடா விடுத்த அறிக்கையில் “ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென தென் ஆப்பிரிக்காவுக்கு சொந்த காரணங்களுக்காக வந்துவிட்டேன். நான் தடை செய்யப்பட்ட ஊக்கமருத்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் நான் நாடு திருமப் வேண்டியதிருந்தது.
இந்த தலைகுனிவான செயல்களுக்கு நான் மன்னிப்புக் கோருகிறேன். கிரிக்கெட் விளையாடுவதை ஒருபோதும் எளிதாக எடுக்கமாட்டேன். என்னவிட கிரிக்கெட் எப்போதுமே மேலானது, என் தனிப்பட்ட அபிலாசைகளுக்கு அப்பாற்பட்டது. நான் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானதால் சஸ்பென்ஷனில் இருக்கிறேன், விரைவில் இந்தியா வந்து ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.
என்னுடைய ஏஜென்ட், கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, குஜராத் டைட்டன்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு உதவிய எஸ்ஏசிஏ மற்றும் சட்டவல்லுநர்கள் குழுவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னைப் புரிந்து கொண்டு என் மீது அன்பு செலுத்திய நண்பர்கள் குடும்பத்தாருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் ஊக்கமருந்து பரிசோதனை அமைப்பு, ரபாடா குறித்து எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. இந்த வாரத்தின் தொடக்கத்தில்தான் தென் ஆப்பிரிக்க ஊக்கமருந்து தடை அமைப்பு அறிக்கை வெளியிடலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: பிரபல கிரிக்கெட் வீரரை அழகால் மயக்கிய மாடல் அழகி..! ஒரே நாளில் 'அக்ரி' விதைத்த மச்சக்காரன்..!