×
 

சச்சின் டெண்டுல்கரையே ஓரம் கட்டிய சாய் சுதர்சன்... டி20 கிரிக்கெட்டில் தரமான சம்பவம்!!

டி20 கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார்.

2025 ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணியும் குஜராத் அணியும் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் - சாய் சுதர்சன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சாய் சுதர்சன் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். தொடர்ந்து அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசிய சாய் சுதர்சன், ஒரே ஓவரில் 20 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து பேட் கம்மின்ஸ் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 17 ரன்கள் சேர்க்கப்பட, ஹர்சல் படேல் வீசிய 5வது ஓவரிலும் சாய் சுதர்சன் 4 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 23 பந்துகளில் 48 ரன்களை விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் 44 ரன்களை எட்டிய போது, சாய் சுதர்சன் இந்த சீசனில் 500 ரன்களை கடந்து அசத்தினார். அதேபோல் இன்னிங்ஸில் தமிழக வீரர் சாய் சுதர்சன் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: RR-ஐ தொடரில் இருந்து வெளியேற்றிய MI... அபார வெற்றியால் முதலிடத்துக்கு முன்னேற்றம்!!

டி20 கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸில் விளாசிய வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார். இதுவரை 59 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 2 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை 54 இன்னிங்ஸ்களில் சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு போட்டியில் கூட டக் அவுட்டாகாமல் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையையும் சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.

அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விரைவாக 1,500 ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 1,500 ரன்களை விரைவாக குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் இருந்தனர். இருவருமே 44 இன்னிங்ஸ்களில் 1,500 ரன்களை குவித்தனர். இந்த சாதனையை சாய் சுதர்சன் 35 ரன்களிலேயே விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். இதனால் தமிழக வீரர் சாய் சுதர்சனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் RR... அரைசதம் விளாசிய ரோஹித்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share