×
 

LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சன்ரைசர்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஸ் மற்றும் ஏய்டன் மார்க்கரம் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். மிட்செல் மார்ஸ் 28 பந்துகளில் அரை சதம் அடிக்க எய்டன் மார்க்கரம் 28 பந்துகளில் அரை சதம் அடித்தார். மிட்செல் மார்ஸ் 39 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதில் 4 பவுண்டரிளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இதை அடுத்து நிக்கோலஸ் பூரான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பந்த் களமிறங்கினார். அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பந்துகளை எதிர் கொண்ட அவர் வெறும் 7 ரன்களை மட்டுமே சேர்த்டு அவுட் ஆனார். மறுமுனையில் ஏய்டன் மார்க்கரம் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் களமிறங்கிய ஆயூஸ் பதோனி மற்றும் நிக்கோலஸ் பூரான்  கூட்டணி அபாரமாக விளையாடியது. நிக்கோலஸ் பூரான்  26 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: இன்றைய ஆட்டத்தில் இவர் பங்கேற்கவில்லை... LSG vs SRH போட்டிக்குறித்து பேட் கம்மீஸ் முக்கிய தகவல்!!

மறுமுனையில் ஆயூஸ் பதோனி 3 ரன்களிலும் அப்துல் சமத் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க சர்துல் தாகூர் 4 ரன்களில் அவுட் ஆனார். இதன் காரணமாக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. 206 எடுத்தால் வெற்றி என்ர இலக்குடன் களமிறங்கிய சன்ரைசஸ் அணி தொடக்க வீரர்கள் அத்தர்வா தைதே மற்றும் அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். அத்தர்வா தைதே 13 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அபிஷேக் சர்மா பந்துகளை தெறிக்கவிட்டார். அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய இசான் கிஷான் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து ஹென்ரிச் கிளாசன் மற்றும் கமிந்து மெண்டிஸ் கூட்டணி இணைந்து நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹென்ரிச் கிளாசன் 28 பந்துகளில் 47 ரன்கள் அடித்து அவுட் ஆனார். கமிந்து மெண்டிஸ் 32 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த அன்கிட் வர்மா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி மீதம் இருக்கும் ரன்களை அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share