மழையால் தொடர்ந்து தாமதமாகும் ஆட்டம்... மழை நீடித்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு!!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டம் மழை காரணமாக தாமதமாகியுள்ளது.
2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து மும்பை அணியின் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் ரிக்கல்டன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அர்ஷ்த் கான் வீசிய 4வது ஓவரில் ரோஹித் சர்மாவும் 7 ரன்களில் வெளியேறினார். இதன்பின் வில் ஜாக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்து விளையாடியது. இதில், ஜாக்ஸ் சிக்ஸ் அடித்து 29 பந்துகளில் அரைசதத்தை எட்ட, அடுத்த 2 பந்துகளிலேயே சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: மும்பை அணியில் மாற்றமா? அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்வது என்ன?
பின் ரஷீத் கான் வீசிய அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் 53 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 1 ரன்னிலும், திலக் வர்மா 7 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் சில ஓவர்களில் மும்பை அணி ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், நமன் திர் அதிரடியாக விளையாட முயற்சித்து 7 ரன்களில் வெளியேறினார்.
இந்த நிலையில் கார்பின் பாஸ்ச் - தீபக் சஹர் கூட்டணி இணைந்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கார்பின் பாஸ்ச் 27 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. 156 எடுத்தால் வெற்றி இலக்குடன் குஜராத் டைடன்ஸ் அணி களமிறங்கிய நிலையில் மழையால் ஆட்டம் தாமதமாகியுள்ளது. மழை தொடர்ந்து நீட்டித்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: மழையால் தப்பித்த DC... ஏமாற்றத்தில் SRH; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!!