ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்த மூன்று அணிகள்.. ஓரிடத்துக்கு மல்லுக்கட்டும் இரண்டு அணிகள்!!
ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.
ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி, குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் டுபிளசி 5 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். ரபாடா வீசிய 6ஆவது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய லோகேஷ் ராகுல், ரஷித் கான் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 35 பந்தில் அரைசதம் கடந்தார்.
அபிஷேக் போரெல் (30), கேப்டன் அக்சர் படேல் (25) ஓரளவு கைகொடுத்தனர். பிரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல், இந்திய பிரிமியர் லீக் அரங்கில் தனது 5ஆவது சதத்தை பதிவு செய்தார். டெல்லி அணி 20 ஓவரின் முடிவில் 3 விக்கெட்டு இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. ராகுல் (112 ரன், 4 சிக்சர், 14 பவுண்டரி), ஸ்டப்ஸ் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.
200 ரன்கள் என்கிற இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி அருமையான தொடக்கத்தைக் கொடுத்தது. நடராஜன் வீசிய 2ஆவது ஓவரிலேயே ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசிய சுதர்சன், அக்சர் படேல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 30 பந்தில் அரைசதத்தை எட்டினார். துஷ்மந்தா சமீரா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சுப்மன் கில், தன்பங்குக்கு அரைசதம் விளாசினார். நங்கூரம் பாய்ச்சியது போல விளையாடிய இவர்களை பிரிக்க முடியாமல் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். குல்தீப் யாதவ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சுதர்சன், இந்திய பிரிமியர் லீக் அரங்கில் தனது 2ஆவது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அசத்திய சுதர்சன் - கில் ஜோடி வெற்றியை உறுதி செய்தது.
இதையும் படிங்க: இலக்கை எட்ட தடுமாறிய SRH... பேட்டிங், பீல்டிங் என இரண்டிலும் கலக்கிய GT வெற்றி!!
குஜராத் அணி 19 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 205 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுதர்சன் (108* ரன், 4 சிக்சர், 12 பவுண்டரி), சுப்மன் (93* ரன், 7 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் அணி
ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்ததன் மூலம் 18 புள்ளிகளுடன் அந்த அணி 3ஆவது முறையாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. டெல்லிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வென்றதால், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளும் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. தற்போது மீதமுள்ள ஓர் இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரையே ஓரம் கட்டிய சாய் சுதர்சன்... டி20 கிரிக்கெட்டில் தரமான சம்பவம்!!