×
 

அடடே.. சூப்பர் OFFERS..!! மேக்புக் மாடல்களுக்கு அள்ளி வழங்கும் ஆப்பிள்..!!

ஏர்பாட்ஸ் 4, ஆப்பிள் பென்சில் அல்லது ஏர்டேக் போன்ற அக்சசரிக்களில் ஒன்றை இலவசமாக பெறலாம்.

ஆப்பிள் நிறுவனம் புதிய M5 சிப்செட் கொண்ட சாதனங்களின் விலையை உயர்த்திய நிலையில், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்காக சிறப்பு 'Back to School' சலுகையை அறிவித்துள்ளது. இந்த வருடாந்திர திட்டம், புதிய மேக்புக் மற்றும் ஐபேட் மாடல்களை வாங்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தனது M5 பிராசஸர் பொருத்தப்பட்ட புதிய மேக்புக் ஏர், M5, M5 Pro மற்றும் M5 Max சிப்செட்கள் கொண்ட மேக்புக் ப்ரோ ஆகியவற்றின் விலையை சமீபத்தில் அதிகரித்தது. 

அதேபோல் 2024 ஐபேட், ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களும் உயர்ந்த விலையில் விற்பனைக்கு வந்தன. இருப்பினும், கல்வி ஆண்டு தொடக்கத்தை மனதில் கொண்டு நிறுவனம் மீண்டும் மாணவர் சலுகைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் கீழ் தகுதியான வாடிக்கையாளர்கள் சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கி, ஏர்பாட்ஸ் 4, ஆப்பிள் பென்சில் அல்லது ஏர்டேக் போன்ற மதிப்புமிக்க அக்சசரிகளை இலவசமாகப் பெறலாம்.

இந்திய சலுகை விவரங்கள்: இந்தியாவில் இந்த ஆண்டு 'Back to School' விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 27 வரை இந்த சலுகை நீடிக்கும். மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேக்புக் மற்றும் ஐபேட் தொடர்களை கணிசமான தள்ளுபடியில் வாங்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். குறிப்பாக, M5 பிராசஸர் கொண்ட 2026 மேக்புக் ஏர் மாடலை மாணவர் சிறப்பு விலையில் ரூ.1,37,900-க்கு வாங்கலாம். 

இதையும் படிங்க: என்ன சோனமுத்தா போச்சா..!! ஹாட்ஸ்பாட் பயன்படுத்துவோருக்கு ஷாக்..!! செக் வெச்ச Airtel..!!

இதோடு ஏர்பாட்ஸ் 4 அல்லது நான்கு ஏர்டேக்ஸ் கொண்ட பண்டில் இலவசமாகக் கிடைக்கும். மேலும், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதியுடன் கூடிய ஏர்பாட்ஸ் 4-ஐ வெறும் ரூ.5,000க்கு அல்லது ஏர்பாட்ஸ் ப்ரோ 3 மாடலை ரூ.13,000க்கு பெறும் விருப்பத்தையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இந்த சலுகைகள் புதிய சாதனங்களை வாங்கும் போது கல்வித் தேவைகளுக்கு ஏற்றவாறு அக்சசரிகளை இலவசமாகப் பெற உதவுகின்றன.

இந்த திட்டம் ஆப்பிளின் நீண்டகால மாணவர் தள்ளுபடி கொள்கையின் ஒரு பகுதியாகும். கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் இந்த சலுகை, மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோர்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

இதையும் படிங்க: ஐபோன் யூசர்ஸ்களுக்கு பெரிய ரிலீஃப்..!! வாட்ஸ்அப்-ல் வரும் புது மாற்றம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share