×
 

ஓரம்கட்டப்படும் ஜியோ, ஏர்டெல்.. அட்டகாசமான திட்டங்கள்.. கம்மி விலையில் வாரி வழங்கும் BSNL..!!

அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நமக்கு அட்டகாசமான திட்டங்களை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம், தனது பிரபலமான ₹249 மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அன்று ஆன்லைன் தளங்களில் இருந்து நிறுத்தியுள்ளது. இந்த திடீர் முடிவு, மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கிய இந்த திட்டத்தை நம்பியிருந்த பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் பட்ஜெட் உணர்வுள்ள பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது, மேலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கு இலவச அணுகலை வழங்கியது.

இதேபோல் ஏர்டெல் நிறுவனமும், அதன் மிகவும் பிரபலமான ₹249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 20 முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில், தினசரி 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்-களை வழங்கியது. இதன் மூலம், குறைந்த செலவில் தரமான சேவைகளைப் பெற விரும்பிய பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், இப்போது மினிமம் ரீசார்ஜ் தொகை ₹299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது பயனர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: 'FULLY MADE IN INDIA' தான்.. ஐபோன் 17 சீரிஸ் மொபைல்கள் இந்தியாவில் தயாரிப்பு..!!

இந்நிலையில் அரசு டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), பல புதுமையான திட்டங்களை அறிவித்து, தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதுடன், நவீன தொழில்நுட்பத்துடன் போட்டித்தன்மையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த திட்டங்கள், பிஎஸ்என்எல்-ஐ மீண்டும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உயர்த்துவதுடன், இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்துகின்றன.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 249 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

எனவே கம்மி விலையில் அதிக சலுகைகள் விரும்பும் பயனர்கள் இனி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம். அதேபோல் பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவை வழங்கும் பணிகளில் உள்ளது. கூடிய விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ₹141 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கும், ₹148 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2.2 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கும் வழங்குகிறது. இப்போது இது குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டாலும் கூட விரைவில் இது விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது. அதாவது தினசரி 1.5 டேட்டா திட்டத்தைப் பொறுத்தவரை மற்ற நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் பிளான் 52% மலிவானது. பெரிய தொகையைச் செலவிட முடியாது என நினைப்போருக்கு இது ஏற்றதாக இருக்கும்.

இப்போது இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் ஜியோ மற்றும் ஏர்டெல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வோடஃபோன் ஐடியாவின் சந்தாதாரர் தளம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜூன் 2025 மாதம் மட்டும் ஜியோ 19 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. அதேபோல ஏர்டெல் 763,482 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. அதேநேரம் ஜியோ 217,816 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share