ஐபோன் பிரியர்களுக்கு குஷியோ குஷி.. செப்.9ம் தேதி ரிலீசாகிறது Iphone 17 சீரீஸ்..!!
ஐபோன் 17 சீரிஸ் போன்கள் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 17 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வை செப்டம்பர் 9ம் தேதி நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த “ஆ-டிராப்பிங்” (Awe Dropping) என பெயரிடப்பட்ட நிகழ்வு, கலிபோர்னியாவின் கியூபர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில், ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறும்.
இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்வு, ஆப்பிள் இணையதளம், யூடியூப் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் மூலம் நேரலை செய்யப்படும். இந்த நிகழ்வில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் புதிதாக அறிமுகமாகும் ஐபோன் 17 ஏர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'FULLY MADE IN INDIA' தான்.. ஐபோன் 17 சீரிஸ் மொபைல்கள் இந்தியாவில் தயாரிப்பு..!!
ஐபோன் 17 ஏர், முந்தைய பிளஸ் மாடலை மாற்றும் வகையில், ஆப்பிளின் மிக மெல்லிய மற்றும் இலகுவான ஐபோனாக இருக்கும் என கூறப்படுகிறது. இது 6.6 இன்ச் திரை, ஒற்றை பின்புற கேமரா மற்றும் ஆப்பிளின் சொந்த C1 மோடமுடன் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற மாடல்களில் A19 அல்லது A19 ப்ரோ சிப்கள், 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளே மற்றும் மேம்படுத்தப்பட்ட 48MP டெலிஃபோட்டோ கேமராக்கள் இருக்கும். ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் அலுமினிய பிரேம் மற்றும் புதிய பார்-வடிவ கேமரா வடிவமைப்புடன் வரலாம். இதுதவிர, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் ஆப்பிள் வாட்ச் SE 3 ஆகியவையும் அறிமுகமாகலாம்.
ஏர்போட்ஸ் ப்ரோ 3, புதிய ஹோம்போட் மினி மற்றும் ஆப்பிள் டிவி 4K ஆகியவையும் வெளியாக வாய்ப்பு உள்ளது. iOS 26, மேகோஸ் 26 உள்ளிட்ட மென்பொருள் புதுப்பிப்புகளின் வெளியீட்டு தேதிகளும் அறிவிக்கப்படும். இந்தியாவில் ஐபோன் 17 விலை ரூ.89,900 முதல் தொடங்கலாம், ஐபோன் 17 ஏர் ரூ.99,900 ஆகவும், ப்ரோ மாடல்கள் ரூ.1,24,900 மற்றும் ரூ.1,64,900 ஆகவும் இருக்கலாம்.
இதையும் படிங்க: 'FULLY MADE IN INDIA' தான்.. ஐபோன் 17 சீரிஸ் மொபைல்கள் இந்தியாவில் தயாரிப்பு..!!