• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அலப்பறையான காதலர் தின வாழ்த்து..! குலுங்கி.. குலுங்கி.. சிரிக்க வைத்த பிரபு தேவா and வடிவேலு..!

    பிரபு தேவா and வடிவேலு இருவரும் அலப்பறையான காதலர் தின வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.
    Author By Bala Sat, 14 Feb 2026 15:31:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actors-prabhu-deva-vadivelus-extravagant-valentines-day-greetings-tamilcinema

    தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த பல காமெடி கூட்டணிகள் இருந்தாலும், அதில் தனித்த இடத்தைப் பிடித்திருப்பது நடிகர் பிரபு தேவா – வடிவேலு கூட்டணிதான். 1990களின் இறுதியிலிருந்து 2000களின் தொடக்கப் பகுதிவரை, இவர்கள் இணைந்து நடித்த பல படங்கள் இன்று வரை தொலைக்காட்சி மறுஒளிபரப்புகளிலும், சமூக வலைதளக் கிளிப்புகளிலும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. காமெடி, நடிப்பு, டான்ஸ், டைமிங் — எல்லாவற்றையும் கலந்த ஒரு அபூர்வ இணைப்பாக இந்த ஜோடி விளங்கியது.

    பிரபு தேவா – வடிவேலு இணைப்பு முதன்முதலில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது காதலன் திரைப்படத்தின் மூலம். அதனைத் தொடர்ந்து Love Birds, மிஸ்டர் ரோமியோ, காதலா காதலா, மனதை திருடி விட்டாய், எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஒவ்வொரு படத்திலும் அவர்களின் காமெடி காட்சிகள் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் அமைந்தன.

    குறிப்பாக 2001ஆம் ஆண்டு வெளியான ‘மனதை திருடி விட்டாய்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பிரபு தேவா, வடிவேலு மட்டுமின்றி விவேக், கவுசல்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இசையமைப்பை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டிருந்தார். இந்தப் படத்தில் பிரபு தேவா – வடிவேலு – விவேக் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டர்களில் சிரிப்பு வெள்ளத்தை ஏற்படுத்தியதாக அக்காலத்தைய ரசிகர்கள் நினைவுகூருகின்றனர். குறிப்பாக உரையாடல் நகைச்சுவை மற்றும் உடல் மொழி காமெடி இரண்டும் கலந்த அந்தக் காட்சிகள், இன்று மீண்டும் பார்க்கும்போதும் சலிப்பில்லாமல் சிரிக்க வைக்கும் தன்மை கொண்டவை.

    இதையும் படிங்க: குட்டி frock-ல்.. முழங்கால் அழகில்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்..!

    actors-prabhu-deva-vadivelus

    2004ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ திரைப்படம், பிரபு தேவா – வடிவேலு இணைந்து நடித்த கடைசி படமாக நீண்ட காலமாக கருதப்பட்டது. அதன் பின்னர் இருவரும் தனித்தனி பாதையில் பயணம் செய்தனர். பிரபு தேவா நடிப்பைத் தாண்டி இயக்குநராகவும் இந்திய அளவில் தன்னுடைய தடத்தை பதித்தார். பாலிவுட் உட்பட பல மொழிகளில் வெற்றிப் படங்களை இயக்கி, பன்முகத் திறமையாளராக திகழ்ந்தார். சமீப காலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

    அதேவேளை, வடிவேலுவும் தனது தனிப்பட்ட காமெடி பாணியால் பல தலைமுறைகளைக் கவர்ந்தவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் சுறுசுறுப்பாக நடிக்கத் தொடங்கியுள்ள அவர், தனது பழைய காமெடி ஸ்டைலை புதிதாய் மாற்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

    இந்நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மறக்கமுடியாத ஜோடி மீண்டும் ஒன்றாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை இயக்குவது சாம் ரொட்ரிகஸ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசையமைப்பை மீண்டும் யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்ள இருப்பது இந்த கூட்டணியின் மீளுருவாக்கத்துக்கு மேலும் பலம் சேர்க்கிறது எனக் கூறப்படுகிறது. இதனால் 2000களின் அந்த இனிய நினைவுகளை மீண்டும் திரையில் காணலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    actors-prabhu-deva-vadivelus

    சமீபத்தில் பொங்கல் தினத்தன்று, வடிவேலுவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரபு தேவா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி, “இவர்கள் மீண்டும் சேர்ந்து ஏதாவது செய்யப் போகிறார்களா?” என்ற கேள்வியை எழுப்பியது. அந்த சந்தேகத்திற்கு பதிலாகவே இப்போது வெளியாகியுள்ள புதிய தகவல்கள் அமைந்துள்ளன.

    இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, பிரபு தேவா தனது எக்ஸ் பக்கத்தில் வடிவேலுவுடன் ஜாலியாக நடந்து செல்லும் ஒரு புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இருவரும் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டு நடந்து செல்கின்றனர். அப்போது வடிவேலுவை நோக்கி, “நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை” என்ற பாடலைப் பாடச் சொல்கிறார் பிரபு தேவா.

    உடனே வடிவேலுவும் அதே உற்சாகத்துடன் அந்தப் பாடலைப் பாடிக்கொண்டே அவருடன் நடந்து செல்கிறார். இருவரின் இயல்பான நட்பு, கலகலப்பான முகபாவனைகள் மற்றும் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் அந்த தருணம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பலரும் “பழைய ஜோடி மீண்டும் வந்துவிட்டது”, “இவர்களின் காமெடி மீண்டும் திரையில் பார்க்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    actors-prabhu-deva-vadivelus

    தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத சில கூட்டணிகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படும் பிரபு தேவா – வடிவேலு இணைப்பு மீண்டும் திரையில் உயிர்ப்பெடுக்க உள்ளதாகும் இந்தச் செய்தி, ரசிகர்களுக்கு இனிய நினைவுகளையும், புதிய எதிர்பார்ப்புகளையும் ஒருசேர கொடுத்துள்ளது. வரும் நாட்களில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமா என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: காமெடி முகம் என்றார்கள்.. ஆனால் இப்ப நான் ஹிரோ..! காரணம்.. என் நண்பர்கள்.. கண்கலங்கியபடி பேசிய நடிகர் புகழ்..!

    மேலும் படிங்க
    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    அரசியல்
    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    தமிழ்நாடு
    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    கிரிக்கெட்
    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share