என்னதான் நடக்கிறது சினிமா உலகில் என அனைவரும் வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு தற்பொழுது போதைப் பொருள் விவகாரம் சூடு பிடித்திருக்கிறது என்றே கூறலாம். ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் வழக்கில் கைதானது நம் அனைவருக்கும் தெரியும். அவரை தொடர்ந்து அந்த வழக்குகள் பல பிரபலங்களும் சிக்கினர். ஆனால் இதனை கண்ட மக்கள் மக்களுக்கு விழிப்புணர்வை கற்றுக் கொடுக்கின்ற முக்கியமான இடத்தில் இருக்கக்கூடிய நடிகர்களே போதைப் பொருளுக்கு அடிமையானால் சிறுசுகளுக்கு யார் புத்திமதிகளை சொல்வார்கள் என புலம்பி வருகின்றனர்.

இப்படி இருக்க சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளை தன்னிடம் வாங்கி பயன்படுத்தியதாக அதிமுக பிரமுகரான பிரசாந்த் தெரிவிக்கையில் அதிரடியாக போலீசார் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர் காவல்துறையினர். மேலும் போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில் போலீசார் இந்த வழக்கில் அவரது பெயரையும் லிஸ்டில் சேர்த்தனர்.
இதையும் படிங்க: நான் என்ன தப்பு செஞ்சேன்... போலீசார் பிடியில் "கூமாப்பட்டி பிரபலம்".. கதறும் இளைஞர்..!

தற்பொழுது இருவர் மீதும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் இந்த வேளையில் பல திரைப்பட பிரபலங்கள் சினிமா துறையில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது என தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ், போதைப்பொருள் என்பது மிகவும் மோசமான ஒன்று அது மனிதனின் இயல்பை மாற்றிவிடும் ஆதலால் போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான்" என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு என்பது ஏதோ இன்று நேற்று மட்டும் புழக்கத்தில் இல்லை, அது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. போதை பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடந்து வருவதால், அதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நாடு போதைக்கு அடிமையாகி வருகிறது...அவ்வளவுதான்" என தெரிவித்தார்.
மேலும், பாடகி சுசித்ரா, "ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் கொகைன் வகை போதைப் பொருளை பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள் சினிமாவை பொறுத்தவரை போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் யாருமே ரத்த பரிசோதனை செய்ய முன்வர மாட்டார்கள். ஏன்? சமீபத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை நடந்ததாக தெரியவில்லையே. உண்மையில் வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக தான் போதைப்பொருள் கலாசாரம் என்பது தமிழ் சினிமாவுக்குள் வந்தது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் பல இடங்களில் உள்ள பப்புகளிலும், ஓட்டல்களிலும் போதைப்பொருள் பயன்பாடு என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. மது விருந்துகளில் நடிகர் மற்றும் நடிகைகள் சர்வ சாதாரணமாக கலந்து கொள்வதை என்னால் பார்க்க முடிந்தது. இந்த சூழலில் கொகைன் பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கும் வந்தது. ஆனால் நான் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டேன்" என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து, நடிகரும் யுடியூபருமான பயில்வான் ரங்கநாதன், " சினிமா துறையில் பல நடிகர் மற்றும் நடிகைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருகின்றனர், ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல நடிகைகளுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் உள்ளனர்" என பல கிசுகிசுக்கும் தகவல்களையும் இணையத்தில் கசிய விட்டு இருக்கிறார். இப்படி இருக்க, இன்னும் நிறைய நடிகர்கள் போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. இப்படிப்பட்டதான சூழலில் இயக்குனர் மாரி செல்வராஜ், விஜய் ஆண்டனி, அருண் விஜய், பாடகி சுசித்ரா, பயில்வான் ரங்கநாதன் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்பொழுது பிரபல நடிகை அம்பிகாவும் தனது கருத்துக்ளை பதிவு செய்து உள்ளனர்.

அதன்படி, பிரபலமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை அம்பிகா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் " போதை பொருள் சாதாரணமான விஷயம் அல்ல அதனை உபயோகித்தால் அது உயிரை கெடுக்கும். நடிகர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து மற்றவர்களும் அதனை பயன்படுத்துவார்கள். ஏனெனில் மக்களுக்கு உதாரணமாக நாம் தான் இருக்கிறோம். ஆதலால் நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவது மிகவும் தவறான விஷயம், அதனை மாற்றி கொண்டாள் உங்களுக்கும் நல்லது சமூகத்திற்கும் நல்லது என கூறி சென்றார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரபலங்கள் போதை பொருள் பயன்படுத்துவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் என தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடிக்கிற வெயிலுக்கு ஆடையை குறைத்த நடிகை மீனாட்சி சவுத்ரி..! ட்ரெண்டிங்கில் ஹாட் போட்டோஸ்..!