இந்திய சினிமாவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் அட்லீ. தென்னிந்திய சினிமாவில் தொடங்கி, பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து இவர் உருவாக்கிய ‘ஜவான்’ திரைப்படம், இந்தியா முழுவதும் மிகப்பெரிய சாதனை படைத்தது. விறுவிறுப்பான திரைக்கதை, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள், மிகவும் அழுத்தமான அரசியல் கருத்துக்கள் மற்றும் ராஜமௌலியை போலவே தொழில்நுட்பத் தரத்தில் புதிய அடையாளம் ஏற்படுத்திய அந்த திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, அட்லீ இயக்கும் அடுத்த படமானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதன்படி தற்பொழுது, அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய பான் இந்தியா திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றில் மாபெரும் மீல்கல் அமையப்போகிறது என அனைவராலும் கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சுமார் ரூ.800 கோடி மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே மிகவும் பிரமாண்டமான செலவு செய்து உருவாக்கும் படங்களில் ஒன்றாக அமையவுள்ளது. இப்படி அனைவரது எதிர்பார்ப்பையும் துண்டியுள்ள இந்தப் படம் ஒரு ‘பேரலல் யூனிவர்ஸ்’ கதைக்களத்தில் உருவாகிறது. இது ஹாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற ‘அவதார்’ படத்தின் பின்னணியைப் போலவே ஒரு தனி உலகத்தை உருவாக்கும் முயற்சி எனத் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உயர் தரம் மற்றும் உலகத் தரமான VFX தொழில்நுட்பங்களை இப்படத்தில் பயன்படுத்தி, ஒரு புதிய உலகத்தையே உருவாக்கி வருகின்றனர் படக்குழுவினர்.

மேலும் படக்குழுவின் தகவல்படி, ' இதில் அல்லு அர்ஜுன் மூன்று மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கிறாராம். அதாவது, ஒரு நடிகர் மூன்று வெவ்வேறு பரிமாணங்களிலும் தோன்றும் வகையில் இப்படத்தின் படைப்பு அமைய இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடைய உடை, நடிப்பு பாணி, குணநலன்கள் மற்றும் பின்னணி கதையுடன் வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அட்லீ படத்தில் எப்பொழுது இசைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்த வகையில், இத்திரைப்படத்திற்கு இசையமைக்க இளம் இசையமைப்பாளரான 'சாய் அப்யங்கர்' ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் புதிய தலைமுறையைச் சேர்ந்தவராக இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனம் பெற்று இருக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் அட்லீயின் இந்த செயலை பாராட்டுகின்றனர். காரணம் அட்லீ, இதுவரை பயன்படுத்திய இசையமைப்பாளர் அனிருத்தின் கூட்டணியைப் பிரித்து, புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தும் இந்த முயற்சி, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது எனவே சொல்லலாம். சாய் அப்யங்கரின் இசையில் நவீன தொழில்நுட்பங்களும், உலகளாவிய இசை கலப்பும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பொய் சொன்னா இருமல் வரும் ஆனாலும் நான்...! டாக்டர் பட்டம் பெற்ற அட்லீ-யால் வயிறு வலிக்க சிரித்த ஆடியன்ஸ்...!
இப்படி இருக்க ஒவ்வொரு கதையில் ஹீரோ இருந்தால் கண்டிப்பாக வில்லன் இருக்கவேண்டும் அல்லவா.. ஆகையால், இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சமாக வில்லன் கதாப்பாத்திரம் அமையவுள்ளது. இதற்காக, படக்குழு ஹாலிவுட் நட்சத்திரமான வில் ஸ்மித் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என திரைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளன. நடிகர் வில் ஸ்மித், இந்திய சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும், ஏற்கனவே இந்திய இயக்குநர்களுடன் நல்ல நட்பையும் காட்டியவரும் என்பதாலும், இது சாத்தியமான ஒப்பந்தமாக மாற வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆகவே இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் உடனான இந்த கூட்டணியில் உருவாகும் ஒரு தனித்துவமான அனுபவமாக இந்த படம் அமையப்போகிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. நடிகர் வில் ஸ்மித் ஒப்பந்தமாகி, அவரும் அல்லு அர்ஜுனும் ஒரே திரையில் மோதும் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். மேலும் பாலிவுட் wwe ரெஸ்லிங் சூப்பர் ஸ்டாரான ராக்கும் இந்த கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி மரணமாஸாக உருவாக்கி வரும் இந்த படம், பான் இந்தியா மட்டுமல்லாது பான் குளோபல் ஸ்டாண்டர்டில் உருவாகிறது. அதன்படி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி, ஆங்கிலம், சீனம், ஸ்பானிஷ், ஜப்பானியம் உள்ளிட்ட பல உலக மொழிகளிலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, இந்திய சினிமாவை உலக எல்லைகளைக் கடந்து, உலகளாவிய வணிக தளத்தில் உயர்த்தும் ஒரு பெரிய முயற்சி என்றே சொல்லலாம். இப்படம் 2026-ம் ஆண்டு துவக்கத்தில் அல்லது அதே ஆண்டின் இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்த 'பாகுபலி – The Epic'..! இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி..!