சினிமா உலகம் என்பது வெளியில் இருந்து பார்த்தால் ஒளி வீசும் நிழற்படங்கள் போலத் தோன்றும். ஆனால் அதன் பின்னால் உள்ள நிகழ்வுகள் பலர் எதிர்பார்க்காத வகையில் கடுமையானவை. இன்று நட்சத்திரங்களாக வலம் வருகிறவர்கள், பலரது பார்வைகள், விமர்சனங்கள், மற்றும் அபத்தமான நிலைப்பாடுகளை தாண்டியே இந்த நிலையை அடைந்துள்ளனர். அந்த வகையில் பாலிவுட் மற்றும் இந்திய சினிமா உலகில் முக்கியமான ஸ்டார் ஹீரோயின்களில் ஒருவரான தீபிகா படுகோனும் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட கடுமையான அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
தனது திரைதுறை பயணத்தின் ஆரம்பகாலங்களை நினைவுகூர்ந்த தீபிகா, பல இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் தன்னுடைய நிறம் குறித்து விமர்சனம் செய்ததாக கூறியுள்ளார். அதன்படி அவர் பேசுகையில் “நான் என் புகைப்படங்களை சிலருக்கு அனுப்பியபோது, அவர்கள் என்னை ஆண்போல இருக்கிறாய் என்று சொன்னார்கள். என் தோற்றம், நிறம் பற்றி வார்த்தைகளை காயப்படுத்தும் வகையில் சொன்னார்கள். அந்த நேரத்தில் நான் மிகவும் வேதனையடைந்தேன்,” என்று தீபிகா கூறியுள்ளார். அதற்குப் பிறகும், சில காலங்கள் வரை இந்த விமர்சனங்கள் தொடர்ந்ததையும், மனதளவில் தாங்க முடியாத அளவிற்கு அவை தன்னை பாதித்ததையும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். "நாம் பெண்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது அந்த விமர்சனங்கள்," என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தீபிகா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டது, சினிமா துறையில் இன்னும் நிறைய பெண்கள் மற்றும் ஆரம்ப கட்ட கலைஞர்கள் எதிர்கொள்ளும் படி ஷேமிங், நிறவெறி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒரு புதிய வழியைத் தொடக்கமாகக் காணலாம். இந்திய சினிமா என்பது பல மொழிகளை இணைக்கும் ஒரு பெரிய தளம். ஆனால் அதில் நடிக்க, அழகின் சில முன்வைக்கப்பட்ட அளவுகள், "இது தான் ஹீரோயினின் தோற்றம் இருக்க வேண்டும்" என்ற மனநிலைகள், இப்போது கூட நிறைவேற்று முயற்சிக்கப்படுவது சோகமானது. தீபிகா இதனை சொல்லும் விதம், தனக்கு மட்டும் இதுபோன்று நடந்ததாக இல்லாமல், ஏராளமான பெண்கள் இதையே எதிர்கொள்கிறார்கள் என்பதை விளக்கும்.

இது போன்ற நிலைகளை எதிர்த்து பேசும் பெருமை, அவரை உண்மையான நட்சத்திரமாக உயர்த்துகிறது. இப்போது தீபிகா தனது முந்தைய அனுபவங்களை கடந்து, மிகவும் வலிமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இணைந்து உருவாக்கும் மாபெரும் படத்தில், தீபிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெற்காசியாவில் மட்டுமின்றி உலகளாவிய முறையிலும் எதிர்பார்ப்பு எழுப்பியுள்ளது. இந்த கூட்டணி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அட்லீவின் முந்தைய படங்கள் போலவே, இப்போதும் ஒரு பலத்த பெண் கதாபாத்திரம் படம் முழுவதிலும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தீபிகாவை தேர்ந்தெடுத்ததன் காரணமாகவே, இந்த படம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது பாய்ந்த FIR.. காரணம் இந்த விளம்பரம் தானாம்..!!
தீபிகாவின் உரையாடல் என்பது, இன்று வளர்ந்து வரும் இளம் நடிகைகள் மற்றும் சிறு துறைகளில் புதிதாக நுழையும் பெண்களுக்கு ஒரு உணர்வு தூண்டலாக செயல்படக்கூடியது. “நீங்கள் எப்படி தோன்றுகிறீர்கள் என்பதல்ல, உங்கள் திறமை என்ன என்பதே முக்கியம்” என்ற பார்வையை மக்கள் கொண்டு வர வேண்டும் என்பது, அவரின் கருத்தின் மையம். அந்த வகையில், இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பலரும் அவருக்குப் பக்கபலமாக குரல் கொடுத்தனர். தீபிகாவின் அனுபவம், இந்திய சினிமா மட்டுமல்ல, உலகளவில் பெண்கள் எதிர்கொள்ளும் உடலியல் விமர்சனங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது. தீபிகா படுகோனின் வாழ்க்கை, வெற்றிக்குப் பின்னால் இருக்கும் வெற்றிடங்களைப் பற்றி பேசுகிறது. ஒரு நட்சத்திரமாக மின்னும் அவரைப் பார்த்து பலர் அவரின் சிரிப்பை மட்டுமே பார்க்கலாம்.

ஆனால் அந்த சிரிப்புக்கு பின்னால் இருக்கும் வலி, போராட்டம், மற்றும் மன உறுதியை தெரிந்து கொள்ளும் போது தான் உண்மையான மெருகான அழகு தெரிகிறது. இது போன்ற நேர்மையான உரையாடல்கள் மேலும் அதிகமாக நிகழ, சினிமா துறையும், ரசிகர்களும், சமுதாயமும் மாற்றத்தை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: நீங்க 'குஷி' ரிலீஸ் செஞ்சா.. நாங்க 'அட்டகாசம்' ரீ-ரிலீஸ் செய்வோம்ல..! மீண்டும் அஜித் படம் திரையில்.. காண தயாரா..!