• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ‘ஜன நாயகன்’ படம் முதல் நாள் பார்க்க முடியாது.. ஏன்னா நான் ரஜினி ரசிகன்..!! ரிலீஸுக்கு முன் அமைச்சர் அருண்ராஜின் பேச்சு வைரல்..!

    அமைச்சர் அருண்ராஜ் ‘ஜன நாயகன்’ ரிலீஸ் குறித்து தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
    Author By Bala Wed, 22 Jul 2026 15:48:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-health-ministers-arun-raj-press-meet-tamilcinema

    தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த இந்த திரைப்படம், பல்வேறு கட்டங்களை கடந்து இறுதியாக வெளியாக உள்ளதால், திரையரங்குகள் முன்பே திருவிழா சூழல் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்ட ஏற்பாடுகளை பகிர்ந்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் கருத்துகளும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    தமிழக முதலமைச்சரின் கடைசி திரைப்படமாக கருதப்படும் ‘ஜன நாயகன்’, அவரது திரைப்பயணத்திற்கு நிறைவு கட்டமாக மட்டுமல்லாமல், அரசியல் வாழ்க்கைக்கு முழுமையாக அர்ப்பணித்த ஒருவரின் உணர்வுப்பூர்வமான அத்தியாயமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் இந்தப் படம் ஒரு சாதாரண திரைப்பட வெளியீடாக இல்லாமல், ரசிகர்களுக்கு உணர்ச்சிமிக்க தருணமாக மாறியுள்ளது.

    இந்த நிலையில், திரைப்படம் குறித்து பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், முதலமைச்சரின் பணிப்பழக்கம், சினிமா மீதான அவரது காதல் மற்றும் அரசியலுக்காக அவர் எடுத்த முடிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், “முதலமைச்சர் எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும், அதை முழு அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். அதுதான் அவரது வெற்றியின் மிகப்பெரிய காரணம். சினிமாவில் இருந்த காலத்திலேயே அந்த ஒழுக்கமும், நேர்த்தியும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சிவப்பு – வெள்ளை புடவையில் அசத்தும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரீனா..!! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த புதிய போட்டோஸ்..!

    health-ministers-arun-raj-press-meet

    திரைப்படப் படப்பிடிப்பில் அவர் கடைபிடித்த நேர ஒழுக்கம் குறித்து நினைவுகூர்ந்த அவர், “காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 7 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார். படக்குழுவை காத்திருக்க வைப்பது, நேரத்தை வீணடிப்பது போன்ற விஷயங்கள் அவரிடம் இருந்ததே இல்லை. இவ்வளவு பெரிய மாஸ் நடிகராக உயர்ந்த பிறகும், தன்னுடைய பழக்கவழக்கங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார்” என்று கூறினார்.

    மேலும், அந்த அர்ப்பணிப்பே தற்போது அரசியலிலும் தொடர்கிறது என்று அவர் குறிப்பிட்டார். “சினிமாவில் காட்டிய அதே தீவிரத்தையும், அதே உழைப்பையும் இன்று மக்களுக்காக அரசியலில் செலுத்தி வருகிறார். அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே, மிகவும் நேசித்த சினிமாவை விட்டு விலகினார். அது எளிதான முடிவு அல்ல” என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த கடைசி நாள் சம்பவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

    வழக்கமாக ஒரு திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடுவது திரையுலக மரபாக இருந்தாலும், அந்த நாளில் அப்படியான கொண்டாட்டம் நடைபெறவில்லை என்று அவர் கூறினார். “அன்று படப்பிடிப்பின் கடைசி நாள் என்பதால், அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடலாம் என்று நினைத்தோம். ஆனால், ‘எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு... வேண்டாம்’ என்று அவர் கூறிவிட்டார். சினிமா வாழ்க்கையின் கடைசி நாள் என்பதால் அது அவருக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இருந்தது” என்று அமைச்சர் நினைவுகூர்ந்தார்.

    மேலும், இந்த திரைப்படத்தில் தானும் ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பதாக அவர் தெரிவித்தார். “இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன். அதனால், மற்ற ரசிகர்களைப் போலவே நானும் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

    health-ministers-arun-raj-press-meet

    இந்தப் பேட்டியின் போது செய்தியாளர்கள் எழுப்பிய ஒரு கேள்வியும் கவனத்தை ஈர்த்தது. “நாளை ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை பார்க்க ஒரு அமைச்சர் விடுப்பு எடுக்கப் போவதாக கூறியிருக்கிறார். நீங்களும் விடுப்பு எடுத்து முதல் நாள் முதல் காட்சி பார்க்கப் போகிறீர்களா?” என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “அமைச்சர்களுக்கு 365 நாள்களும், 24 மணி நேரமும் விடுமுறை என்றே கிடையாது. மக்கள் பணியே எங்களின் முதல் பொறுப்பு. எந்த நேரத்திலும் மக்களுக்காக பணியாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்” என்று கூறினார். அதேநேரத்தில், தனது கல்லூரி கால நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டார். “நான் கல்லூரியில் படித்த காலத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். அவரது திரைப்படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியையே பார்த்துவிடுவேன். அந்த அளவுக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது” என்று அவர் சிரித்தபடி கூறினார்.

    ஆனால், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை முதல் நாளே பார்க்க முடியாதது குறித்து வருத்தமும் தெரிவித்தார். “நாளை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசு நிகழ்ச்சி ஒன்று இருப்பதால், முதல் நாள் முதல் காட்சியை என்னால் பார்க்க முடியாது. அது எனக்கு ஒரு சிறிய வருத்தமாக இருக்கிறது. ஆனால், பொறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம்” என்று அமைச்சர் விளக்கமளித்தார்.

    ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். பல இடங்களில் சிறப்பு அலங்காரங்கள், பதாகைகள், கட்-அவுட்கள், நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    health-ministers-arun-raj-press-meet

    மொத்தத்தில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஒரு சாதாரண திரைப்பட வெளியீடாக இல்லாமல், ஒரு நீண்ட திரைப்பயணத்தின் நிறைவாகவும், அரசியல் வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்த முடிவு செய்த தலைவரின் கடைசி திரைப்படமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த உணர்வை அமைச்சர் அருண்ராஜ் தனது பேட்டியில் பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அனைவரின் பார்வையும் திரைப்படத்தின் வெளியீடு மற்றும் அதற்கு ரசிகர்கள் அளிக்கவுள்ள வரவேற்பின் மீது திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் நடிகை நினைவிருக்கா..!! மாலத்தீவில் செம கிளாமரில் சுற்றும் போட்டோஸ் வைரல்..!

    மேலும் படிங்க
    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    இந்தியா
    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    தமிழ்நாடு
    ரூ.2000 கோடிப்பே... தமிழ்நாடு அரசு தலையில் இடியாய் இறங்கிய செய்தி... சமாளிப்பாரா சி.எம்.விஜய்?

    ரூ.2000 கோடிப்பே... தமிழ்நாடு அரசு தலையில் இடியாய் இறங்கிய செய்தி... சமாளிப்பாரா சி.எம்.விஜய்?

    தமிழ்நாடு
    போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!

    போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!

    இந்தியா
    வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!

    வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி! சிபிசிஐடி வழக்கில் வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் மறுப்பு!

    ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி! சிபிசிஐடி வழக்கில் வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் மறுப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    இந்தியா
    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    தமிழ்நாடு
    ரூ.2000 கோடிப்பே... தமிழ்நாடு அரசு தலையில் இடியாய் இறங்கிய செய்தி... சமாளிப்பாரா சி.எம்.விஜய்?

    ரூ.2000 கோடிப்பே... தமிழ்நாடு அரசு தலையில் இடியாய் இறங்கிய செய்தி... சமாளிப்பாரா சி.எம்.விஜய்?

    தமிழ்நாடு
    போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!

    போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!

    இந்தியா
    வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!

    வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி! சிபிசிஐடி வழக்கில் வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் மறுப்பு!

    ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி! சிபிசிஐடி வழக்கில் வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் மறுப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share