இந்திய சினிமாவில் புது யுகத்தின் காதல் கதைகளுக்கு புதிய வடிவம் அளித்து வரும் மேடாக் பிலிம்ஸ் நிறுவனம், இன்னொரு நவீன காதல் கதையை ரசிகர்களுக்கு அளிக்க தயாராகியுள்ளது. அதனபடி தினேஷ் விஜன் தயாரிக்கும் புதிய திரைப்படம், ‘பரம் சுந்தரி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடித்துள்ளனர். காதல், கலாச்சார வேறுபாடு, குடும்ப எதிர்ப்பு மற்றும் நவீன வாழ்க்கைத் தொனியில் நகரும் இந்த திரைப்படம், ஆகஸ்ட் 29-ம் தேதி உலகளவில் வெளியாகிறது. இப்படி இருக்க, ‘பரம் சுந்தரி’ திரைப்படத்தின் இயக்கத்தை 'தஸ்வி' திரைப்படம் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்ற துஷார் ஜலேதா இயக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: மல்லிகை பூவுடன் அழகிய சேலையில்.. தங்கமாய் ஜொலிக்கும் நடிகை ஜான்வி கபூரின் கிளிக்ஸ்..!
‘தஸ்வி’யில் அவர் சமுதாய பிரச்சனைகளை நகைச்சுவையாக கொண்டு பேசும் விதத்தில் வடிவமைத்தார். இப்போது, ‘பரம் சுந்தரி’ திரைப்படத்தில் காதலை மையமாகக் கொண்டு, சமூகக் கோட்பாடுகள் மற்றும் கலாச்சார முரண்களை தொட்டுச் செல்லும் வகையில் உருவாக்கி இருக்கிறாராம். இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ‘பரம்’ எனும் வடஇந்திய இளைஞராக நடித்துள்ளார். ஜான்வி கபூர்,‘சுந்தரி’ எனும் தென்னிந்திய பெண்ணாக கலாசார மரபுகளை மதிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இரு வேறுபட்ட சூழல்களில் வளர்ந்த இரு மனிதர்கள், ஆனால் ஒரே உணர்வில் காதலில் ஒன்றிணைகிறார்கள் என்பது தான் கதையாக இருக்குமாம். இந்த சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. எப்பொழுது கவர்ச்சியில் காட்சியளிக்கும் ஜான்வி கபூர் இந்த படத்தில் பாரம்பரிய உடையில், தென்னிந்திய மரபுகளை பிரதிநிதித்துவப் படுத்தும் விதத்தில் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் அதிரடியாக வெளியாகி உள்ளது..

அந்த டிரெய்லரில் சித்தார்த் கூறும் வசனமான, "காதலுக்கு மொழி வேறுபாடு பிரச்சனை கிடையாது. ஆனா சாப்பாடு வேறுபாடு இருக்கலாமே" போன்ற நகைச்சுவை வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்தக் கதையின் மைய கருத்தாக இருக்கிறது ஒரு மொழி, கலாசாரம், உணவுப் பழக்கம், குடும்ப மரபுகள் என அனைத்திலும் வேறுபடுவதை விட காதலின் உண்மை முக்கியமா? என்ற கேள்வியை ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது. இப்படத்தை குறித்து ஜான்வி கபூர் பேசுகையில், " சுந்தரி தான் இதுவரை செய்த கதாபாத்திரங்களில் மிகவும் தனிச்சிறப்புடையது. அது ஒரே நேரத்தில் அழகு, மரபு, உண்மை உணர்வுகளைக் கொண்டு காட்சியளிக்கிறது" என்றார்.
👉🏻 Param Sundari - Official Trailer - click here 👈🏻
அதேபோல் சித்தார்த் மல்ஹோத்ரா பேசுகையில், "இந்த காதல் கதை, வெறும் ஹீரோயின்-ஹீரோ பாணியில் உருவான கதை இல்ல. இது உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது" என்றார். இந்த நிலையில் படம் தற்போது இந்தி மொழியில் வெளியாகிறது. ஆனால், தென்னிந்திய பின்னணியைக் கொண்டது என்பதால், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் அல்லது சப்டைடில்ஸ் மூலம் வெளியீடும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ‘பரம் சுந்தரி’ திரைப்படம் ஆகஸ்ட் 29 அன்று உலகளாவிய ரீதியில் திரையிடப்படுகிறது. ஆகவே படத்தின் முன்பதிவுகள், பெரும்பாலான நகரங்களில் விரைவில் தொடங்க உள்ளன. ஆகவே ‘பரம் சுந்தரி’ வெறும் ஒரு காதல் படம் அல்ல. அது நவீன இந்தியாவின் கலாச்சார வேறுபாடுகளுக்குள் உதயமாகும் உண்மை காதலைப் பற்றிய படைப்பு.

சிதைந்த உறவுகளை மீண்டும் இணைக்கும் விதமான இந்தக் கதையை துஷார் ஜலேதா, ஒரு நுட்பமான கலைபார்வையுடன் கையாளும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஜான்வி மற்றும் சித்தார்த் கூட்டணியில் இது முதல் திரைப்படமென்றாலும், இந்த கூட்டணி நிச்சயம் ரசிகர்களிடம் புதிய பார்வையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அசத்தும் அழகில் அற்புதமான கிளாமர் உடையில் நடிகை ஜான்வி கபூர்..!