தமிழ் சினிமா என்பது வெறும் கலைக்கு மட்டும் அல்ல, சமூகத்தின் நலனுக்காகவும் பலர் பங்களிக்கின்ற ஒரு தளம். காமெடி, ஆக்ஷன், சண்டை, பாடல் என்று பல தளங்களில் கதாநாயகர்கள் தங்களை வெளிப்படுத்தினாலும், சிலர் உண்மையிலேயே கதாநாயகர்களாக மக்கள் வாழ்க்கையில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில், இரண்டு நடிகர்களை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் தான். அவர்கள் வெறும் திரையில் ஹீரோவாக நடிக்கவில்லை, நிஜ வாழ்விலும் பலருக்கு நம்பிக்கைத் தூணாக இருந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: என் வாழ்க்கையை மாற்றியவர் கலா மாஸ்டர் தான்..! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பளிச் பேச்சு..!!
சூர்யா தனது நடிகர் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்தே சமூக நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவர் நிறுவிய அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒளியூட்டும் பணியைச் செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை, தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகளில் கல்விக்காக போராடும் மாணவர்களுக்கு உதவி அளிக்கிறது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல், பட்டப்படிப்பு போன்ற உயர் கல்வி கட்டங்களில் சேர்ந்திருக்க அவரின் நிதி உதவி முக்கிய பங்காற்றுகிறது. மாணவர்களிடம் கல்வி என்பது அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய ஒரு சக்தி என்பதைப் புரியவைத்து, அதை நனவாக்கும் விதத்தில் பணி ஆற்றி வருகிறார் சூர்யா. இதற்கு தமிழக மக்கள் மட்டுமல்லாது, இந்திய அளவில் கூட பாராட்டு கிடைத்துள்ளது. அதேபோல் மற்றொரு பக்கம், ராகவா லாரன்ஸ், ஒரு நடன இயக்குநராக துவங்கி, இன்று ஒரு முன்னணி நடிகராக இருப்பதோடு, சமூக சேவைகளிலும் முன்னிலை வகிக்கிறார். அவர் தொடங்கிய மாற்றம் அறக்கட்டளை, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியாக ஆதரவு அளித்து வருகிறது. அவரது சமூக பணி எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி மிக நேரடியானதுடன், தன்னார்வமுள்ளதாகவும் மாறி உள்ளது. யாரேனும் உதவி கேட்டால், அவர் உடனடியாக செல்கின்றார். மருத்துவம், கல்வி, வீட்டு வசதி, விதவைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு துறைகளில் அவரின் “மாற்றம்” அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இப்படி இருக்க சமீபத்தில் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அது வெறும் ஒரு செய்தி அல்ல, ஒரு குடும்பத்தின் கண்ணீரும், நம்பிக்கையும் கலந்த கதையாக உள்ளது. அதில் அவர், " மகளின் படிப்புச் செலவுக்காக தனது மறைந்த மனைவியின் தாலியை அடகு வைத்த ஒரு தந்தையைப் பற்றி அறிந்தேன். அது என் மனதை மிகவும் தொட்டது. ஏனென்றால், எனது குடும்பமும் ஒரு காலத்தில் இதே போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டது. மாற்றம் அறக்கட்டளையின் மூலம், தாலியை மீட்டு அவரிடம் திருப்பித் தர முடிந்தது. அது வெறும் தங்கம் மட்டுமல்ல, அவரது அன்பு மனைவியின் விலைமதிப்பற்ற நினைவு. இன்று என் இதயம் உண்மையிலேயே நிறைந்துள்ளது" என இந்த ஒரு பதிவை உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது வெறும் ஒரு விலைமதிப்புள்ள நகை அல்ல. 'தாலி' என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையை பிரதிபலிக்கும், அவரது உறவின் அடையாளம், அவரது கணவருக்கு ஒரு நினைவு, குடும்பத்தின் புனித பிணைப்பு.
👉🏻 raghava lawrence - video link - click here 👈🏻
அதனை ஒரு தந்தை அடகு வைக்கும் நிலைக்கு வருவதாகும், மகளின் எதிர்காலத்திற்காக...இந்த உண்மை உணர்வுகள் தான் ஒரு குடும்பத்தின் பாரத்தை வெளிப்படுத்துகின்றன. ஆகவே ராகவா லாரன்ஸ் அதை பார்த்தபோது, அவர் தனது வாழ்க்கையின் கஷ்ட நாட்களை நினைவு கூர்ந்தார். "நான் இந்த நிலையை அனுபவித்திருக்கிறேன்" என்பதே அவர் சொல்லும் முக்கியமான புள்ளி. சமூக சேவையில் உண்மை பிணைப்பு இருக்க வேண்டும் என்றார் அவர். அந்த உணர்வு தான் இந்த பதிவின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று சினிமா நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் படங்களைப் போடுவது மட்டுமல்லாமல், சமூகத்தில் உண்மையான மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. சூர்யா மற்றும் லாரன்ஸ் இருவரும் இன்று ஏழைகளின் வலிகளை உணர்ந்து செயல்படுபவர்கள். இவர்கள் சாதனை என்னவென்றால், அவர்கள் செய்த உதவியை மிகைப்படுத்தி விளம்பரமாகச் சொல்லவில்லை. மற்றவர்களை ஊக்குவிக்க, நல்லது நடக்கிறது என்பதை உணர வைக்க மட்டுமே அவர்கள் அதை பகிர்கிறார்கள். இத்தகைய செயல்கள், இளைஞர்களுக்குச் சிறந்த தூண்டுகோலாக இருக்கின்றன. “நாம் படிக்க வேண்டும்”, “நாம் உயர வேண்டும்”, “நம்மால் முடியும்” என்பதற்கு உதாரணமாக இந்த உதவிகள் விளங்குகின்றன. ஏழை குழந்தைகளும், உழைக்கும் பெற்றோர்களும் நம்பிக்கையுடன் முன்னேற இந்த உதவிகள் சின்ன தீபமாக விளங்குகின்றன.

மொத்தத்தில் சினிமாவில் நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் நிஜ வாழ்வில் கதாநாயகன் ஆக இருப்பது அருமையாக இருக்கிறது. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும், அந்த இரண்டிலும் வெற்றிபெற்றிருக்கின்றனர். ஒரு தந்தை, தன் மனைவியின் நினைவையும் தன் மகளின் எதிர்காலத்தையும் சமன் செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். அந்த சமநிலையை உருவாக்க உதவியவர் தான் லாரன்ஸ். இது தமிழ் சினிமா உலகம் தரும் உண்மை நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: நான் கொஞ்சமா தான் குடிப்பேன்.. ரொம்பலாம் இல்ல..! ஓப்பனாக பேசிய நடிகை சம்யுக்தா..!