அன்று முதல் இன்று வரை பல சினிமா பிரபலங்களை வறுத்தெடுத்து வரும் லிஸ்டில் இரண்டு பேர் உள்ளனர் ஒன்று பாடகி சுசித்ரா, மற்றொருவர் நடிகரும் யுடியூப் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன். எந்த நடிகர் நடிகைகள் எது செய்தாலும் முதலில் இவர்கள் இருவரது கருத்துக்கள் இணையத்தில் வலம்வராமல் இருக்காது. எப்படி? ப்ளூ சட்டை மாறன் படத்தைக் குறித்து ரிவ்யூ செய்கிறாரோ அதேபோல் இவர்கள் இருவரும் ஏதாகிலும் ஒரு நடிகர் அல்லது நடிகை ஒரு விவகாரத்தில் சிக்கிக் கொண்டால் அதனைப் பற்றி விவரமாக பேசி வருவர்.

இப்படி இருக்க சமீப காலமாக போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா முதலானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்னும் நிறைய நடிகர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. இப்படிப்பட்டதான சூழலில் இயக்குனர் மாரி செல்வராஜ், விஜய் ஆண்டனி, அருண் விஜய் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்பொழுது யூடியூப் பிரபலமும் நடிகருமான பல்வான் ரங்கநாதனும் சினிமா துறையில் பல நடிகர் மற்றும் நடிகைகள் போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பதாகவும், ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல நடிகைகளுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து உள்ளதாகவும் பல கிசுகிசுக்கும் தகவல்களை இணையத்தில் கசிய விட்டிருந்தார்.
இதையும் படிங்க: 2025 வசூல் வேட்டையில் நடிகர் அஜித்குமார் படம் நம்பர் 1..! வெளியானது டாப் 5 லிஸ்ட்..!

இந்த சூழலில் அவருக்கு பல எதிர்ப்புகள் நடிகைகள் தரப்பிலிருந்து வந்தாலும் அதனைப் பற்றி ஒரு நாளும் கவலைப்படாத பயில்வான் ரங்கநாதன் அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்தார். இந்த நிலையில் இதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த நடிகர் சங்கம் தற்பொழுது அவருக்கு எதிராக எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில்

" தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய் கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதுமின்றியும் பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்னும் நபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக 2025 தொடுக்கப்பட்டது.

வழக்கின் கடுமையை உணர்ந்து இனி அவ்விதம் அவதூறாக பதிவிட மாட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் உறுதிமொழி தத்து நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம், அந்த உறுதி மொழியில் இருந்து அவர் சற்றும் தவறக்கூடாது என்ற ஈடுமையான உத்தரவின் அடிப்படையில் அந்த நபருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளது. இதைத் தொடர்த்து சற்று காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில், சமீப காலமாக மீண்டும் பயில்வான ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலர், எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் வாரி இறைந்து வருகின்றனர். அவ்விதம் அவதாறு பரப்புபவர்கள் மேற்காணும் வழக்கினை மனதில் கொண்டு உடனடியாக அவர்களது இந்த சட்ட விரோத செயலை நிறுத்த வேண்டும்.

அவ்விதம் நிறுத்தத் தவறும் பட்சத்தில் அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த முறையை விடகடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலமாக தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடரபான ஆபாசமான அவதூறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் உறுப்பினர்கள் நவன் பேணும் தென்னிந்திய நடிகர் சங்கம்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அவ்வளவு தான் போச்சு..! என்னடா குக் வித் கோமாளி ஷோவ இப்படி பண்ணிட்டீங்க.. ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்..!