தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

சமையல் மற்றும் நகைச்சுவையை இணைத்து வழங்கப்படும் இந்த நிகழ்ச்சி, பல இளம் கலைஞர்களின் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 3 எழுத்து இட்லி நடிகையா.. தயங்காம என் பெயரையே சொல்லி இருக்கலாம்..!! ரவிமோகன் பேச்சுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ..!

அதில் குறிப்பிடத்தக்கவராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பாடகியும் தொலைக்காட்சி பிரபலமுமான சிவாங்கி.

சிவாங்கியின் திரையுலக பயணம் ஒரு சாதாரண பாடல் போட்டியிலிருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் அவர் பாடல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

ஆனால் கடைசி கட்டம் வரை செல்ல முடியாத நிலையில், வெற்றியை கைப்பற்றவில்லை என்றாலும், அவரது குரலும் மேடை நடையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த அனுபவமே பின்னர் அவருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியது.

பாடல் போட்டியில் வெற்றி பெறாத பின்னரும், மனம் தளராமல் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். அதன்பிறகு “இனி வேறு ரூம் போவோம்” என்ற சிந்தனையுடன் தொலைக்காட்சி உலகில் புதிய பாதையை தேர்ந்தெடுத்தார். அதுவே அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய நிகழ்ச்சியாக அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் “கோமாளி” எனும் நகைச்சுவை பாத்திரத்தில் களமிறங்கினார்.

சமையல் போட்டியில் சீரியஸான சூழ்நிலையை தனது நகைச்சுவை, இயல்பான பேச்சு மற்றும் எமோஷனல் ரியாக்ஷன்கள் மூலம் மாற்றிய அவர், விரைவாக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறினார்.

முதல் சீசனிலேயே அவர் பெற்ற வரவேற்பு மிகப்பெரியது. சமையல் செய்யும் போட்டியாளர்களை திசைதிருப்புவது, நடுவர்களுடன் கலகலப்பாக உரையாடுவது, மற்றும் எதிர்பாராத தருணங்களில் அவர் காட்டும் நகைச்சுவை நடிப்பு ஆகியவை நிகழ்ச்சியின் ஹைலைட்களாக மாறின.
இதையும் படிங்க: ஆபாச கருத்தை பதிவிட்ட நபரை திணறடித்த நடிகை சைத்ரா ஆச்சார்..!! மன்னிப்பு கேட்டு சரண்டர் ஆன நபர்..!