வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

தக் லைஃப் படத்திற்கு அமோக வரவேற்பு..! ப்ரீ புக்கிங்கில் சாதனை..!

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது கமலின் தக் லைஃப்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்த சூழலில் முதலில் தக் லைஃப் படத்தின் டைட்டில் பாடலும் அதில் கமல்ஹாசன் ரங்கநாயகன் சக்திவேல் நாயக்கர் நியாபகம் வச்சிக்கோங்க என சொன்னது அனைவரையும் புல்லரிக்க செய்தது. இதனை அடுத்து வெளியான ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா, எங்க சுந்தரவல்லி-யா, இன்றும் சுந்தரம் ஆகுங்க, இந்தா சக்கரக்கட்டியா, சீட்டு பொங்கல் ஆகுங்க… என்ற பாடல் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றது. இப்பாடலில் இடம்பெற்ற நடன காட்சிகள் அனைவரது மனதையும் கவரும் வகையில் இருந்துள்ளது. இதனை அடுத்து வெளியான "விண்வெளி நாயகா" என்ற பாடல் ஸ்ருதி ஹாசன் அவரது தந்தைக்காக பாடிய பாடலாக இருந்தது. 

இதையும் படிங்க: கர்நாடகத்தில் எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்க முடியாது.. கமல்ஹாசன் நெத்தியடி ரியாக்‌ஷன்!!

இந்த பாடல்களை விட இரண்டு நாட்களுக்கு முன்  "ஓ மாறா" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். 'ஜம்பப்பா மன்னாரே' என தொடங்கும் இப்பாடலின் வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு ஆயிரம் யானை-யின் பலம் ! யார் தடுத்தாளும் அதை போரிட்டு முடிகிற குணம் ! இது யாருக்கும் அடங்காத ரணம் !இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா என்ற வரிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.  

இப்படி பாடல்களே பயங்கர ஹிட் கொடுத்திருக்கும் வகையில், கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என அனைவரும் சொல்லிக்கொண்டிருக்க, சமீபத்தில் இசைவெளியீட்டில் கமல் பேசிய ஒரு வார்த்தை கர்நாடகாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அதன்படி, " உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த கர்நாடக மக்கள் கன்னட மொழியை குறித்து அவதூறாக கமல் பேசியிருப்பதாக கூறி தக் லைப் படம் வெளியிட கூடாது என பிரச்சனை செய்து வருகின்றனர். 

இதனை அடுத்து அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிப்போம் என எச்சரித்து வருகின்றனர். "நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றைக் கற்பித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மொழி பிரச்சனை குறித்து பேச அரசியல் வாதிகளுக்கு தகுதியும் கிடையாது. தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்ப்பதில்லை.. ஆனால் அரசியல் எதிர்பார்க்கும் என கூறி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் சமீபத்தில் துவங்கியுள்ளது. இப்படி இருக்க, ப்ரீ புக்கிங்கில் இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிம்புவை அழவைத்த இயக்குனர் மணிரத்தினம்..! ஆறுதல் படுத்திய டி.ராஜேந்திரன்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी