தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டவர் கவின். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துவங்கி, வெற்றி பெற்ற வெள்ளித்திரை நடிகராக மாறியுள்ளார். 'நட்புன்னா என்னானு தெரியுமா', 'லிப்ட்', 'டாடா' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது அவர் நடித்து வெளிவந்துள்ள புதிய படம் 'கிஸ்'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த செப்டம்பர் 19, அன்று உலகம் முழுவதும் வெளியானது.
இதையும் படிங்க: அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்த கவினின் 'கிஸ்'..! முதல் நாள் வசூலில் சாதனை..!
இப்போது, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், படத்தின் முதல் நாள் வசூலின் அளவு, அதன் எதிர்கால வெற்றியை முன்கூட்டியே நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படியான 'கிஸ்' படத்தை இயக்கியவர் சதீஷ், இது அவரது முதல் திரைப்படமாகும். அறிமுக இயக்குநராக இருந்தாலும், அவர் படத்தின் இயக்கத்திலும் காட்சித் தேர்வுகளிலும் மிகவும் நுணுக்கமான பாணியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த படத்தில் நாயகனான கவின் – தன்னம்பிக்கையுடன், நகைச்சுவை கலந்த நுணுக்கமான காதல் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். அதேபோல் நாயகியான 'அயோத்தி' படத்தின் மூலம் அறிமுகமான பிரீத்தி அஸ்ரானி – இவர் தனது நடிப்பின் மூலம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். அத்துடன் உதவி கதாப்பாத்திரங்களில் - மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி உள்ளிட்டோர் – படம் முழுவதிலும் நகைச்சுவையும் உணர்ச்சியையும் சமமாக கொண்டு சென்றுள்ளனர். இந்த படத்தினை ராகுல், ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ‘கிஸ்’ படம் ஒரு பேண்டஸி ரொமான்டிக் காமெடி என வகைப்படுத்தப்படுகிறது. கதையின் மையம், ஒரு சாதாரண இளைஞனுக்கும், அவனது வாழ்க்கையில் எதிர்பாராமல் நுழையும் ஒரு மாய நபருக்கும் இடையேயான நகைச்சுவையும் காதலும் கலந்த சம்பவங்கள். படத்தில் காதல் என்பது மட்டும் இல்லாமல், குடும்பம், நண்பர்கள், மற்றும் வாழ்க்கையின் சிறு சிறு சந்தோசங்களை பற்றிய அழுத்தமான பாங்கிலும் படம் எடுத்துக் கூறுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் ஒரு பாசிட்டிவ் அனுபவமாக அமைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களிலும் இப்படம் பற்றி நல்ல விமர்சனங்கள் வெளிவருகின்றன. மேலும் ‘கிஸ்’ படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலேயே இந்த படம் மொத்தம் ரூ. 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
KISS - Official Sneak Peek | Kavin | Sathish | click here
புக் மை ஷோ, மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் நல்ல ரேட்டிங்குகளைப் பெற்றுள்ளது. இளம் ரசிகர்கள் மட்டுமல்லாமல், குடும்பப் பிரேட்சகர்களிடமும் படம் இடம்பிடித்துள்ளது. முன்னணி திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்களாக ஓடிவரும் இப்படம், வரும் வார இறுதியில் வசூலில் மேலும் ஒரு பிளாஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே, நடிகர் கவின் தனது சமூக ஊடக பக்கத்தில் 'ஸ்னிக் பீக்' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், படத்தின் முக்கியமான ஒரு காமெடி மற்றும் காதல் காட்சி இடம்பெற்றுள்ளது. ரசிகர்கள் இடையே அந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது. ஆகவே நடிகர் கவின் தனது நடிப்புத் திறமையை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பதை ‘கிஸ்’ படம் தெளிவாகக் காட்டுகிறது.

முதல் நாள் வசூலிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வார இறுதி மற்றும் பண்டிகைக் காலங்களில் வெற்றி பாதையில் பாயும் என நம்பப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதோடு, சமூக ஊடகங்களில் அதன் மீதான பாராட்டுக்களையும் பரப்பி வருகின்றனர். இயக்குனர் சதீஷ் முதல் படத்திலேயே வெற்றி பெற்றுள்ளதோடு, நடிகர் கவினின் மார்க்கெட்டையும் பலப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்த அப்டேட்டால் கலங்கடிக்கும் கவினின் 'கிஸ்'..! படத்தின் இசை வெளியீட்டால் குஷியில் இளசுகள்..!