ஆரம்ப காலத்தில் இருந்து சிவாஜி கணேசன் என்றால் அவருக்கு இணையான நடிகர் எம்.ஜி.ஆர் என்பார்கள். அவர்களுக்கு அடுத்த தலைமுறை வரும்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் அவருக்கு இணையான நடிகர் உலகநாயகன் கமலஹாசன் என்பார்கள். அதே 90ஸ் தலைமுறைகளை எடுத்து பார்த்தால் நடிகர் அஜித்திற்கு இணையான நடிகர் எனப் பார்த்தால் தளபதி விஜய் மட்டுமே என கூறுவர்.

அந்த அளவிற்கு நடிகர் விஜய் தனது உழைப்பால் இன்று உயர்ந்து இருக்கிறார். தான் நடித்துக் கொண்டிருந்த 'கோட்' திரைப்படத்தில், நடிகர் விஜய் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியை கொடுத்து, 'இனி எல்லாவற்றையும் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என சொல்லும்பொழுது சிவகார்த்திகேயன், 'இதைவிட பெரிய வேலைக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்று தெரிகிறது.. நீங்கள் அதை பார்த்துக் கொள்ளுங்கள் இதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்' என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் என்ன தான் தளபதி விஜய் சிவகார்த்திகேயன் கையில் பொறுப்புகளை கொடுத்தாலும் அவரிடத்தை சிவா பிடிப்பாரா? என்பது கேள்விக்குறிதான்.
இதையும் படிங்க: விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜனநாயகன்'..! அதிரடி அப்டேட் கொடுத்த படக்குழு..!

இருப்பினும் இன்று தமிழக மட்டுமல்லாது அனைத்து சினிமா திரையுலகிலும் சோகத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் அதுதான் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகும் செய்தி. இனி மக்களுக்காக முழு நேர அரசியல்வாதியாக நான் மாறப்போகிறேன் என்று சபதம் எடுத்த விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அனைவரையும் திக்கு முக்காட வைத்து வருகிறார். இப்படிப்பட்ட விஜய் ஆரம்பத்தில் நடிக்க வரும் பொழுது, என்ன முகம் இது? இப்படி ஒரு நடிகரா? முதலாவது உனக்கு நடிக்க தெரியுமா? என பல விமர்சனங்களை காதுகளில் கேட்டு கண்கலங்கி வருந்தியவர் தான் நடிகர் விஜய். ஆனால் சினிமா நம்மை மிகவும் எளிதில் உயர்த்தி விடாது அதற்கு நம்முடைய உழைப்பு நூறு சதவீதத்தை விட 200 மடங்கு கொடுக்க வேண்டும் என்று உணர்ந்த நடிகர் விஜய் அதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டார்.

பின்பு மெல்ல மெல்ல இவரது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பிடித்து போக பிரியமானவளே, குஷி என அனைத்து படங்களையும் நடிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படி இருக்க படிப்படியாக விஜயின் கில்லி, திரைப்படம், போக்கிரி, திருப்பாச்சி, மதுர, சிவகாசி, குருவி, வேட்டைக்காரன் என அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றியை நோக்கி நகர சினிமா துறையில் விஜயின் திரைப்படங்களுக்கு மவுஸ் கூட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சிறு சிறு சம்பளத்தில் சினிமா துறையில் நடிக்க வந்த விஜய் தற்பொழுது ஒரு பாடத்திற்கு ரூபாய் 200 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான இவரது பிகில், தெறி, மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, கோட், லியோ உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட்டுதான்.

இப்படி இருக்க நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ என தெரியவில்லை இனி தான் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்து தற்பொழுது ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்து முழு நேர அரசியல் வாதியாக களம் இறங்கி இருக்கிறார். வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெறும் எலக்ஷனில் கலந்து கொள்ள இருக்கும் விஜய்க்கு பேர் ஆதரவு ரசிகர்கள் மத்தியில் இருப்பதால் ஒருவேளை அவரும் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என பலரும் பேசி வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் விஜய் பேசிய காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பேசிய விஜய், " நான் படிப்பில் அவ்வளவு சிறந்த மாணவன் இல்லை அதனால் தான் என் தந்தையிடம் என்னை திரைப்படங்களில் அறிமுகப்படுத்துமாறு பலமுறை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவரோ முடியவே முடியாது என்று கூறிவிட்டார், இதனால் வீட்டை விட்டு வெளியேறுவதை போல மிகப்பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து நேராக உதயம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து கொண்டு இருந்தேன். எப்படியும் படம் இரண்டு மணிநேரம் ஓடும், முழுவதுமாக பார்த்து விட்டு வீட்டு வீட்டுக்கு சென்று விடலாம் என எண்ணித்தான் படத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.

ஆனால், படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, நான் உதயம் தியேட்டரில் இருப்பதை கண்டுபிடித்த என் அப்பா அங்கு வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்" என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகரை தூங்கவிடாமல் செய்த அந்த மாதிரி படம்..! பதற்றத்துடன் வெளியே சொன்ன மணிகண்டன்..!