×
 

நடிகர் ஆர்யா சொன்னது உண்மையா? - பிரபல ஓட்டலை யாருக்கு விற்றிருக்கிறார் தெரியுமா?

அப்படியானால் அந்த உணவகத்தை ஆர்யா யாருக்கு விற்பனை செய்திருந்தார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

சென்னை சேனாம்பேட்டையில் காமதேனு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் திரைப்பட நடிகர் ஆர்யாவின் வீட்டில் இன்று காலை 8:30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அங்கு தற்போது வரி ஏய்ப்பு புகாரின் பெயரில் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் முதல் கட்ட தகவலை தெரிவித்திருக்கிறார்கள். இதேபோல சென்னை அண்ணாநகர், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமைந்துள்ள சீசெல் எனப்படும் பிரபல உணவகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதில் ஒரு உணவகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யா நடத்தி வந்துள்ளார். தற்போது அதை வேறொருவருக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அண்ணாநகரில் உள்ள அந்த உணவகத்திலும் தற்போது சோதனையானது  இன்று காலை 6:30 மணி முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சோதனை முடிவிலேயே என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது?, எவ்வளவு வரியப்பு செய்திருக்கிறார்கள்?, அங்கு என்னென்ன நகை பொருள் அல்லது அசையும் சொத்து அசையா சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே சோதனை முடிவில் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், இந்த தகவல் குறித்த நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் ஓட்டலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அது வேறு ஒரு நபருக்கு ஏற்கனவே விற்கப்பட்டதாகவும், அந்த ஓட்டலுக்கு தற்போதைய வேறு ஒருவர் என்று அவர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பாக்கிய ஐ.டி. ரெய்டு... நடிகர் ஆர்யா சொன்னா திடுக்கிடும் தகவல்...! 

அப்படியானால் அந்த உணவகத்தை ஆர்யா யாருக்கு விற்பனை செய்திருந்தார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே 
கேரளா தலசேரியைச்  சேர்ந்த குன்ஹி மூசா என்பவருக்கு ஆர்யா தனது சீஷெல் ரெஸ்டாரண்ட்டை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. சென்னை தரமணியில் உள்ள
ஷீ ஷெல்  ரெஸ்டாரண்ட் உரிமையாளர் குன்ஹி மூசா என்பதும், நடிகர் ஆர்யா சொன்னது உண்மை என்பதும் உறுதியாகியுள்ளது. 

இதையும் படிங்க: தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share