மீண்டும் மீண்டும் சிக்கலில் நடிகர் ரவிமோகன்.. ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்..!!
சென்னை ஈசிஆரில் உள்ள நடிகர் ரவிமோகனின் பங்களா வீடு மற்றும் தேனாம்பேட்டை ஸ்டூடியோவில் வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் (ECR) பிரபலமான கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தமிழ் திரைப்பட நடிகர் ரவிமோகனின் சொகுசு பங்களா வீட்டின் கதவில், இன்று காலை வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்களா வீடு கட்ட வாங்கிய கடனுக்கு தவணைத் தொகை கட்டாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது திரையுலகில் பரவலான விவாதங்களைத் தூண்டியுள்ளது.
ஈசிஆரில் உள்ள இந்த பங்களா, ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி வசித்து வந்த இடமாகும், ஆனால் தற்போது அவர்களது விவாகரத்து பிரச்னையைத் தொடர்ந்து இந்த சொத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. நடிகர் ரவி மோகன், இந்த சொகுசு பங்களாவின் பத்திரத்தை அடமானம் வைத்து தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார். இந்தப் பங்களாவை அவரது மனைவி ஆர்த்தியுடன் சேர்ந்து வாங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாக கடன் தவணை (EMI) செலுத்தப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஹாட் உடையில் அழகாக மாறிய நடிகை பிரியா வாரியர்..!
இதனையடுத்து, வங்கி நிர்வாகம் பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்த நோட்டீஸை ரவி மோகன் தரப்பு பெற மறுத்து, வங்கியில் நேரடியாக பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், வங்கி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி இன்று வங்கி அதிகாரிகள் பங்களா வீட்டின் கதவில் ஜப்தி நோட்டீசை ஒட்டியுள்ளனர்.
மேலும் நோட்டீஸ் ஒட்டிய பிறகு, 30 நாட்களுக்குள் தொகை செலுத்தாவிட்டால், சொத்து ஏலத்தில் விடுவிக்கப்படும்" என்று கூறியுள்ளனர். இதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது ஸ்டூடியோவிலும் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனை அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்தச் சர்ச்சையை பெரிதாக்கியுள்ளன. இதுகுறித்து திரையுலக சக நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர், "திரைத்துறையினரின் நிதி பிரச்சினைகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம், திரைப்படத் துறையில் நடக்கும் நிதி துன்பங்களை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடன் பாக்கி காரணமாக பல நடிகர்கள் சொத்துக்களை இழந்துள்ளனர். ரவிமோகனின் ரசிகர்கள், அவரது படங்களை மீண்டும் பார்க்க வேண்டும் என வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அழகிய மாடர்ன் உடையில் ஜொலிக்கும் நடிகை சாக்ஷி அகர்வால்..!