90களில் கதைக்களம்; மாஸ் லுக்கில் சூர்யா... மார்கெட்டை தூக்கி நிறுத்துமா ரெட்ரோ?
நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படம் இன்று தமிழில் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 700 ஸ்கீர்ன்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், சூர்யாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதும் இருந்துள்ளதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கணிசமான அளவுக்கு ரெட்ரோ படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
மேலும் படத்திற்கு காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழ் அரசோ அல்லது அண்டை மாநில அரசுகளோ அனுமதி அளிக்கவில்லை. மாறாக காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. சூர்யாவின் கடந்த படமான கங்குவா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. இப்படியான நிலையில் ரெட்ரோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. 90 காலகட்டத்தை குறிப்பிடும் படத்தில் ஸ்டைலான லுக்கில் சூர்யா அசத்தி இருக்கிறார்.சண்டைக் காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். சிரிப்பு தெரியாமல் வளரும் சூர்யா சிரிக்க முயற்சி செய்யும் காட்சிகள் நேர்த்தி.
இதையும் படிங்க: சினிமா வரலாற்றில் எந்த ஹீரோவுக்கும் இல்லாத அடி..! சின்னா பின்னமான சூர்யா..!
மேக்கப் இல்லாத முகமாய் அழகான நடிப்பால் கவர்கிறார் பூஜா ஹெக்டே. நெளிவான அவரது நடனம் ரசிக்க வைக்கிறது. நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். இந்த நிலையில் படம் குறித்து ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு ரசிகர், பூஜாவின் கேரியர் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ். இந்த படத்திற்காக அவர் உண்மையில் அனைத்தையும் கொடுத்துள்ளார். முதல்பாதி திரைக்கதை, இடைவேளை, மாஸ் காட்சிகள். எப்போதும் போல பி.ஜி.எம். கேமரா அசைவுகள் & காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர், சூர்யா பயங்கர பெர்ஃபார்மன்ஸ், பூஜாவுடன் ஜோடி பெஸ்ட். கனிமா பாடல் அற்புதமாக உள்ளது.
அட்டகாசமான பிரேம்கள். சிங்கிள் ஷாட் சூப்பர். சில பின்னடைவுகள் படத்தில் உள்ளன. கிளாசிக் காதல் விவரிப்பு நெகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். ரெட்ரோ முதல் பாதி - நன்று. அருமையான முதல் 30 நிமிட திரைக்கதை, கனிமா சிங்கிள் ஷாட் காட்சியில் உச்சம். இடைவெளி பகுதி தூய பேரின்பம் + நெருப்பு. சூர்யா-பூஜா ஜோடி அற்புதம். கன்னடிபூவே பாடல் திரையில் நன்றாக இருந்தது என்றார் மற்றொருவர். இவ்வாறு படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வருவதால் சூர்யா மற்றும் பட குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. மறுபுறம் கங்குவா படத்தல் கவிழ்த்தப்பட்ட சூர்யாவின் மார்கெட்டை ரெட்ரோ தூக்கி நிறுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: மவனே... ரெட்ரோ-வை அரை மணி நேரம் தாண்டி பார்த்துட்டா நீ வீரன்டா..! குமுறும் ரசிகர்கள்..!