×
 

MYSORE SANDAL சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் தமன்னா.. ஏன் இங்க திறமைக்கு பஞ்சமா? திட்டித்தீர்க்கும் கன்னட மக்கள்..!

மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கன்னட மக்களிடையே எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.

அனைத்து மக்களால் "மில்க் பியூட்டி" என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை தமன்னா. அந்த அளவிற்கு பார்க்க அழகாகவும் ஆளை மயக்கும் முகபாவனையும் கொண்ட இவரது நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். தமன்னா என்றால் சிரிப்பு, அழகு என்பது ஒருபுறம் இருக்க அவரது ரசிகர்களால் 'இடையழகி' என அன்புடன் அழைக்கப்படுபவர்.  2016 ஆம் ஆண்டு "கேடி" என்ற தமிழ் படத்தில் தமிழில் அறிமுகமானார் தமன்னா பாட்டியா. இதனை தொடர்ந்து, சிறுத்தை, பையா, சுறா, படிக்காதவன், தில்லாலங்கடி, தோழா, அரண்மனை 4, ஓடேலா 2 போன்ற படங்களில் நடித்து தனது பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தார். இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல், நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர்.  

பெங்களூரில் மைசூர் அரச குடும்பத்தினரால் கடந்த 1916ஆம் ஆண்டு மைசூர் சாண்டல் சோப் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அதன்பின் 1918ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை அரசுத்துறையாக மாற்றப்பட்டது. இந்த மைசூர் சாண்டல் சோப், 100% தூய இயற்கை எண்ணெய் கொண்டு உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், இதனை தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கர்நாடக அரசு, மைசூர் சாண்டல் சோப் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்து, அதனை பான் இந்தியா லெவனில் விளம்பரப்படுத்த முடிவு செய்திருக்கிறது.

இதையும் படிங்க: என்ன பெத்தாரே.. முருகன் தந்தாரே..! ரசிகரை திட்டிய சூரி இப்ப எங்கு இருக்கிறார் பாருங்க..!

இதற்காக கர்நாடகா அரசின் மைசூர் சோப் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகை தமன்னாவுக்கு ரூ.6.2 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது.  

இதனையறிந்த கன்னட மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கன்னட திரைப்படத் துறையைச் சேர்ந்த திறமையான நடிகைகள் இருக்கும் போது, எதற்காக பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளீர்கள், கன்னட சினிமாவில் திறமைக்கு பஞ்சமா? அல்லது நடிகைகளுக்கு பஞ்சமா? இந்தி நடிகைக்கு ஊதியத்தை கொடுப்பதற்கு பதில் உள்ளூர் நடிகைக்கு கொடுக்கலாமே என்று சோசியல் மீடியாவில் முதல்வர் சித்தராமையாவை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். 

இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் வேறு நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், அவர்களை எங்களால் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை என்று கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,800 கோடியாகும். அதில் 12% மட்டுமே கர்நாடகாவில் இருந்து ஈட்டப்படுகிறது. மீதமுள்ள 88% வருமானம் மற்ற மாநிலங்களில் இருந்தே ஈட்டப்படுகிறது. இதன் காரணமாக தேசிய அளவில் பல்வேறு மொழி ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வரும் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

அதுமட்டுமில்லாமல் அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் மைசூர் சாண்டல் சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விமர்சனம் என்ன எனக்கு புதுசா..! தக் லைஃப் படம் வரட்டும் அப்பறம் பாருங்க - நடிகை த்ரிஷா ஓபன் டாக்..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share