×
 

"Harris with Love": கோலாகலமாக நடந்த மியூசிக் கான்சர்ட்.. ஹாரிஸை கௌரவித்த கனடா அரசு..!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அண்மையில் கனடாவில் நடத்திய இசை நிகழ்ச்சிக்காக அந்நாட்டு அரசு அவரை கௌரவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2001ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'மின்னலே' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரது வசீகரா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று, அவருக்கு முதல் பிலிம்பேர் விருதை வென்று தந்தது. லேசா லேசா, சாமி, காக்க காக்க, அந்நியன், சிங்கம், என்னை அறிந்தால் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். 

மேலும் ரவி மோகன் நடித்த 'பிரதர்' படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்தார். இதில் மக்காமிஷி பாடல் மிகவும் பிரபலமானது. இதேபோல் விஜய் நடித்த 'தி கோட்' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜின் சின்ன சின்ன கண்கள் பாடல் இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: இசையமைப்பாளரை நம்பி ஏமாந்த ரசிகர்கள்..! அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த டி.இமான்..! 

ஹாரிஸ் பாடல்கள் என்றாலே தனித்துவம்தான். தற்போது இசையமைக்கும் படங்கள் குறைவு என்றாலும், இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டையும் தாண்டி சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளிலும் கான்சர்ட் நடத்தி வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.  ரசிகர்கள் அவரது பாடல்களை கேட்டு மயங்கி போனார்கள். அந்த அளவிற்கு வைப்போடும் இசை நிகழ்ச்சியை ஹாரிஸ் நடத்தியிருந்தார்.

அந்த வகையில் அண்மையில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கனடா நாட்டின் டொரண்டோவில் நடந்த Harris with Love இசை நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவரது பாடல்கள் நேரடியாக பாடப்பட்டு, கனடா அரசு அவரை கௌரவித்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், இதனை பார்த்து குஷியான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து கனடா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 

முன்னதாக கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியாகக் கூறினார். மேலும், இறந்தவர்களின் குரலைப் பயன்படுத்தி பாடல்களை உருவாக்குவதற்கு பதிலாக, புதிய பாடகர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 

இதையும் படிங்க: வெள்ளை நிற உடையில் கிளாமர் லுக்கில் நடிகை கீர்த்தி ஷெட்டி..! மனதை பறிகொடுத்த இளசுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share