கிளைமாக்ஸில் ஆடியன்சை கவர்ந்த "3BHK"... சூரியவம்சம் ஜோடி படம்-னா சும்மாவா....விமர்சனத்தில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்...!
ரத்தமும், கத்தியும் இல்லாத வித்தியாசமான ஒரு திரைப்படமாகவே 3BHK திரைப்படம் பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கும் வகையில் அமைந்துள்ள திரைப்படம் தான் "3BHK". இன்று வெளியான இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதன்படி தற்பொழுது இப்படத்தின் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, தந்தையினுடைய கனவை நிறைவேற்றும் மகனின் திரைப்படமாக "3BHK" படம் உள்ளது. இந்த படத்தின் கதையை குறித்து முழுவதுமாக பார்க்க வேண்டுமானால், மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார் நடிகர் சரத்குமார். அவருக்கு துணையாக இருக்கும் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி நடித்திருக்கிறார். இந்த இரு தம்பதிகளுக்கும் மகன் சித்தார்த், மகள் மீத்தா ரகுநாத் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இப்படி தனது மனைவி பிள்ளைகளோடு அழகான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் நடிகர் சரத்குமார்.
இதையும் படிங்க: காவலாளி அஜித்குமார் லாக்கப் டெத்.. திமுகவின் ஃபெயிலியரை குறிக்கிறது.. நடிகை குஷ்பூ காட்டமான பேச்சு..!
இப்படி இருக்க தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் சேர்த்து மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு சொந்த வீட்டை வாங்க வேண்டும் என்பதே சரத்குமாரின் கனவாக இருக்கிறது. இதற்காக அவர் பல வருடங்களாக கடினமாக உழைத்தாலும் பிள்ளைகளினுடைய படிப்பு செலவு வீட்டிற்கு உண்டான செலவு, வாடகை என யாவற்றையும் எடுத்து வைத்தாலே மீதி ஒன்றும் இல்லாமல் போக வாழ்க்கை என்னும் போராட்டத்தில் சிக்கி தவித்து வருகிறார் சரத்குமார். இந்த சூழலில், தனது பிள்ளைகளின் படிப்பில் மிகவும் கவனம் செலுத்தி வரும் சரத்குமார் வீடு என்ற கனவின் பாரத்தை தனது மகனான சித்தார்த்தின் மீது வைக்கிறார்.
இதனால் தனது அப்பாவின் கனவை நிறைவேற்ற சித்தார்த்தும் அவரது சகோதரியுமான மீதா ரகுநாதன் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருவரும் கடினமாக தனது உழைப்பை கொடுத்து பணங்களை சேமிக்கிறார்கள். ஆனால் எவ்வளவுதான் பணத்தை நாம் சேர்த்து வைத்து கனவை நினைவாக்க நினைத்தாலும் அதனை தவிடுபடியாக எமன் வருவதைப் போல இவர்கள் சேர்த்து வைத்த பணத்தையும் காலி செய்யும் வகையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறி இருக்கும். சேமித்த மொத்த பணமும் செலவானதையடுத்து நடிகர் சரத்குமாரின் கனவு நிஜமானதா? இல்லையா? என்பதை அழகாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். தனது அப்பாவின் கனவை நிறைவேற்ற முடிந்ததா? முடியவில்லையா? என்று பிள்ளைகளின் பரிதவிப்பையும் இந்த திரைப்படம் காண்பித்திருக்கிறது.
இதில் மிகுந்த வலியை கொடுக்கும் காட்சிகள் என்றால் நடிகர் சித்தார்த் கையில் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, ஒரு தோல்வி சந்தித்த தகப்பனாக தனது மகனின் தொடர் தோல்வியை கண்டு திட்டவும் முடியாமல் வேதனை தாங்கவும் முடியாமல் நடிகர் சரத்குமார் தனது நடிப்பை ஆசாத்தியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படத்தில் இரண்டு லெஜெண்டுகள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்லும் பொழுதே படத்தின் காட்சிகள் எப்படி இருக்கும் என்பது நமக்கே தெரியும். பல வருடங்களுக்கு முன்பு வெளியான 'சூரியவம்சம்' திரைப்படத்திலேயே இவர்களது நடிப்பு அப்படி இருந்தது என்றால், இப்பொழுது குடும்ப கதாபாத்திரத்தில் சரத்குமாருக்கு இணையாக நடித்திருக்கிறார் நடிகை தேவயானி.
குறிப்பாக சூரியவம்சத்தின் கெமிஸ்ட்ரி இந்த திரைப்படத்தில் வொர்க்கவுட் ஆகி இருக்கிறது என்றே சொல்லலாம். மேலும் தனது தகப்பனுக்காக போராட்டத்தை சாதனையாக மாற்றத் துடிக்கும் சித்தார்த்தின் நடிப்பு அனைவரையும் மிரள வைக்கிறது. சாமானிய இளைஞரின் அழுகையை தனது குரல் பாணியில் இருந்து வெளிப்படுத்தி இருக்கிறார் சித்தார்த் என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் வழக்கம் போல நடிகர் யோகி பாபுவின் காமெடியும் மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் அழகை சேர்த்தது என்றால் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை தான். இவை அனைத்தும் படத்திற்கு பிளஸாக மாறியிருக்கிறது.
மேலும் படத்தின் மைனஸ்கள் என்று குறிப்பிட வேண்டுமானால், சீரியல்களில் காண்பிப்பதை போல குடும்பத்தில் கஷ்டம் என்பது மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை போல் காண்பிப்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது, மேலும் ஒரு இடத்தில் கூட புன்னகையை வர வைக்க முடியாத அளவிற்கு படம் மிகவும் சோகத்தையே முன்னோக்கி வைத்து நகர்கிறது. ஆனால் என்னதான் படம் அப்படி இப்படி என்று சொன்னாலும் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்றே சொல்லலாம். ஏனெனில் கிளைமாக்ஸ் காட்சிகள் அப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் கைதட்டி ஆரவாரப்படுத்துகின்றனர்.
தற்பொழுது வெளியாகும் திரைப்படங்களில் இருக்கும் ஆக்சன் ரியாக்சன் காட்சிகள் பெரிதும் இல்லாமல் ரத்தமும், கத்தியும் இல்லாத வித்தியாசமான ஒரு திரைப்படமாகவே 3BHK திரைப்படம் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'காந்தி கண்ணாடி' படத்திற்கு கிடைத்த சம்பளம்..! KPY பாலா செய்த நெகிழ்ச்சி செயல்.. கண்ணீர் விட்ட குடும்பம்..!