×
 

பாகுபலிக்கு விரைவில் திருமணமா..! நடிகர் பிரபாஸ் உறவினர் வெளியிட்ட முக்கிய தகவல்..!

நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து முக்கிய தகவலை அவரது உறவினர் பகிர்ந்து உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பாகுபலி படம் மூலம் உலகளாவிய பிரசித்தியடைந்த நடிகர் பிரபாஸ். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, பான் இந்திய அளவில் பெரும் புகழைப் பெற்றவர். இவரது நடிப்பு, கம்பீரமான தோற்றம், எளிமையான வாழ்கை முறை ஆகியவை அவரது தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரை பற்றிய ஒரு வதந்தி தொடர்ந்து பரபரப்பாகவே இருந்து வருகிறது.. அது என்னவெனில் அவருடைய திருமணம் எப்போது? யாருடன்? என்பது தான்.

இப்படியாக பிரபாஸ் தற்போது 45 வயதைக் கடந்துள்ள நிலையில், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடன் இணைக்கப்பட்டு பல நடிகைகள் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையிலும், பிரபாஸின் திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசப்படும் செய்திகளுக்கு முடிவே இல்லாமல் இருக்கிறது. அவருடைய ரசிகர்களோ, “இவர் எப்போது தான் கல்யாணம் செய்து கொள்வாரோ? என கேள்விளை கேட்டு வருகின்றனர். இதற்கு பதிலாகவே தற்போது வந்துள்ள புதிய தகவல், அந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக உள்ளது. அதன்படி, திருமணத்திற்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் தேவை என பிரபாஸ் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை வழி உறவினர் ஒருவர், ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில், "சிவபெருமானின் ஆசி பொழியும் போது பிரபாஸ் திருமணம் செய்துகொள்வார். நாங்கள் அனைவரும் அவரது திருமணத்திற்காகக் காத்திருக்கிறோம். குடும்பத்தினராக நாங்கள் தொடர்ந்து சில முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஆனால், இறைவனின் நேரம் வந்தாலே அது நடைபெறும் என்ற நம்பிக்கையோடு உள்ளோம்" என தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தற்போது ஊடகங்களில் பரவி வரும் நிலையில், பிரபாஸின் திருமணம் தொடர்பான காத்திருப்பு இன்னும் தொடரும் என தெரிகிறது.

இப்படி இருக்க நடிகர் பிரபாஸ் திருமணம் செய்ய இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் பலவிதமான வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் பாஜக தலைவரின் மகளுடன் பிரபாஸ் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவியதுண்டு. ஆனால் இவற்றை பிரபாஸ் தரப்பில் தொடர்ந்து மறுத்து வந்தனர். அதே நேரத்தில், நடிகர் பிரபாஸ் சில நேரங்களில் தன் திருமணத்திற்கான முடிவை தனக்கே ஒதுக்கி வைத்துள்ளார் என்றும், குடும்பத்தினரின் ஒப்புதலோடு அவர் ஒரு நேரத்தில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகின்றது. ஆகவே திருமணத்தைத் தவிர்த்து, நடிகர் பிரபாஸ் தனது வாழ்க்கையை முழுமையாக சினிமாவுக்கே அர்ப்பணித்துள்ளார். பாகுபலி, சாதி, ராதே ஷ்யாம், சலார் போன்ற படங்கள் மூலம் அவர் தன் நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா...! "கூலி" படத்தை பார்த்து முதல் விமர்சனத்தை பதிவு செய்த உதயநிதி ஸ்டாலின்..!

இப்போது அவர் பல முக்கிய பன்மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 'கல்கி 2898 AD', 'ராஜஸப்தமி', மற்றும் இன்னும் பெயரிடப்படாத மிஸ்டிரி திரில்லர் படங்கள் ஆகியவை அவரது கையிலுள்ள படங்கள்.  பிரபாஸ் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் சினிமாவை விட்டுவிடுவார் எனவும், அவர் ஓர் ஆன்மீகப் பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும் சில தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றன. ஆனால் இதற்கும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் உறுதிப்படுதலும் இல்லை. அவரது திருமணத்திற்கான நேரம் மற்றும் திருமண வாழ்க்கையின் பின் பாதை குறித்து முழுமையான தகவலை அவரே அறிவிப்பார் என குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆகவே நடிகர் பிரபாஸ் திருமணம் என்பது அவருடைய ரசிகர்களுக்கான ஒரு தனி விழாக் கொண்டாட்டமாகிவிட்டது. இதற்காக அவர்கள் ஆண்டு தோறும் காத்திருக்கின்றனர்.

தற்போது வந்துள்ள உறவினர் கருத்து, இது ஒரு ஆன்மீக நேரத்துக்கேற்ப நடைபெறும் என்பதையும், அது விரைவில் நிகழலாம் எனவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எப்போது, யாருடன், எங்கு என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக பிரபாஸ் கல்யாண மணமாலை அணிந்து வருவதை உலகமே பார்ப்பது உறுதி.
 

இதையும் படிங்க: நாளை திருவிழாவாக மாற போகும் திரையரங்குகள்..! "கூலி" படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share