வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

ஹீரோக்கள் இல்லாமல் தமிழ் சினிமா இருப்பதால் ஏகே 64 படத்திற்கு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் நடிகர் அஜித்.

ஒரு பக்கம் தமிழ் சினிமாவை இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமலஹாசன் ஆகிய இருவரும் ஆட்சி செய்து வருகின்றனர். அதேபோல் அடுத்த தலைமுறை லிஸ்டில் இதுவரை இருந்த இளைய தளபதி விஜய் மற்றும் அஜித் ஆகிய இவர்கள் இருவரில் விஜய் தற்பொழுது ஜனநாயகன் திரைப்படத்தின் அனைத்து படைப்பிடிப்புகளையும் முடித்துவிட்டு முழு நேர மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். 

அவர் விலகியதால் தற்பொழுது அந்த இடம் காலியாக இருக்கிறது. இதனை அடுத்து அடுத்த தலைமுறைக்கான புது ஸ்டாரை ரசிகர்கள் தேர்வு செய்து வருகின்றனர். அதேபோல் தான், நடிகர் அஜித் குமாரும் சினிமாவில் இருந்து விலகலாம் என்று நினைத்தாலும் அவரது ரசிகர்கள் தயவுசெய்து நீங்கள் கார் ரேஸ் கூட ஓட்டுங்கள் ஆனால் உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எங்களுக்காக ஒரு படமாவது நடித்துக் கொடுங்கள் என கேட்டதின் காரணமாக அவர் தற்பொழுது முடிவு ஒன்றை எடுத்து இருந்தார். அதில் இனி ரேஸ்களுக்கு செல்லும் பொழுது சினிமாவில் நடிப்பதில்லை என்றும் சினிமாவில் நடிக்கும் பொழுது ரேஸ்களுக்கு போக மாட்டேன் என்றும் சபதம் எடுத்து இருக்கிறார். 

இதனால் தற்பொழுது சினிமாவில் உள்ள அனைவரும் நிம்மதி பெறும் மூச்சு அடைந்திருக்கும் நிலையில் விஜய் தான் சென்று விட்டார் எப்படியோ அஜித்தும் சென்று விடுவார் என்று நினைத்த நேரத்தில் பரவாயில்லை ரசிகர்களுக்காக அவர் இருப்பது பல தயாரிப்பாளர்கள் மனதை லேசாக்கி இருக்கிறது. சினிமாக்களில் நடிகர் அஜித் நடிக்க ஆரம்பிக்கும் பொழுது இருந்த தோற்றத்திற்கும் இப்பொழுது இருக்கும் தோட்டத்திற்கும் நிறைய மாறுபாடுகள் உள்ளது. அதேபோல் தான் அப்பொழுது காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் அஜித், தற்பொழுது வில்லன்களை புரட்டி எடுக்கும் ஆக்சன் கிங் ஆக மாறி இருக்கிறார். இவருடைய படங்களில் வரும் டயலாக்குகளாகட்டும் இவரது நடிப்பு ஆகட்டும் ஏன்? இவரது அடிதடி சண்டை காட்சிகள் ஆகட்டும் அனைத்தும் ரசிகர்களை புல்லரிக்க செய்து தான் வருகிறது. 

இதையும் படிங்க: ரசிகர்களின் தீர்ப்பே தயாரிப்பாளரின் தீர்ப்பு..!  ரீரிலீஸ் ஆகிறது அஜித்தின் “குட் பேட் அக்லி”..!

ஒவ்வொரு முறையும் தனது ரசிகர்களுக்காக படத்தை வெளியிடும் அஜித், எப்பொழுதும் தனது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் எனக்கு அடைமொழிப் பெயரை வைத்துக் கூறுங்கள் என சொல்வதில்லை. அவர் எப்பொழுதும் கூறும் ஒரே வார்த்தை என்னவெனில், நான் சம்பாதிக்கிறேன் எனது குடும்பத்தை பார்க்கிறேன் உங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது நண்பா, படத்தை பாருங்கள் ரசியுங்கள் ஆனால் உங்கள் குடும்பத்தை போய் பாருங்கள் என சொல்லும் ஒரு அருமையான நடிகர் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெருமையாகவே இருக்கிறது. மேலும் ரேஸ்க்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இந்தியாவிற்காக போராடிவரும் நடிகர் அஜித் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

இப்படிப்பட்ட நடிகர் அஜித் சமீபத்தில் நடித்திருந்த ஃபேன் பாய் திரைப்படமான "குட் பேட் அக்லி" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் அதற்கு முன்பாக வெளியாகி இருந்த 'விடாமுயற்சி' திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தத் திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடி தருமா? என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்புக்கு பலனாக இத்திரைப்பதத்தை அட்டகாசமாக எடுத்திருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கும் நடிகர் அஜித் தனது மகனுக்கு கொடுத்த சத்தியத்திற்காக ஜெயிலில் பல வருட தண்டனைகளை பெற்ற பின்னர் தனது மகனின் பிறந்த நாளுக்கு அவரைப் பார்க்க வருகிறார் அவர் வெளியே வரும்பொழுது அவர் மகன் ஜெயிலுக்கு போகும் போது அது அவருக்கு மிகவும் வலிக்கிறது.

ஒரு பக்கம் மகனைக் காப்பாற்றுவதா? இல்லை இன்னொருபக்கம் தன்னை புரிந்து கொள்ளாத மனைவிக்காக பேசுவதாக என தெரியாமல் புலம்பி கொண்டிருக்கும் அஜித் தனது மகனைக் காப்பாற்ற பல கட்ட போராட்டங்களில் இறங்குகிறார். கடைசியாக எப்படியோ தனது மகனை வெளியே எடுத்துவிடுவார் நடிகர் அஜித். இந்தத் திரைப்படம் உலக அளவில் ரூ.285 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.  இப்படிப்பட்ட அட்டகாசமான திரைப்படத்தை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்பொழுது அஜித்தின் 'ஏகே 64' திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் ரூபாய் 163 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் அஜித் தற்பொழுது நடிக்க இருக்கின்ற ஏகே 64 திரைப்படத்திற்கு ரூபாய் 180 கோடியை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனும் தனக்கு சம்பளமாக ரூபாய் 12 கோடி கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: இரண்டு நடிகைகள் உடன் நடிக்க தயாராகியுள்ள அஜித்…! என்ன AK ரசிகர்களே ரெடியா..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी