திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்த 'பாகுபலி – The Epic'..! இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி..!
பாகுபலி படத்தின் பத்துவருட கால நினைவை கொண்டாட திரையரங்குகளுக்கு 'பாகுபலி – The Epic' என்ற படம் மீண்டும் வருகிறது.
இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்த படங்களின் வரிசையில் மிகப்பெரிய படைப்பாக அனைவரது பார்வையில் இருக்கும் படம் தான் பாகுபலி. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘பாகுபலி: த பிகின்னிங்’, மற்றும் அதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி: த கன்கலுஷன்’ ஆகிய இரு பாகங்களும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதோடு, இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய வரலாற்று சாதனையும் பெற்றது. இந்த படம் மூலம் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இந்திய சினிமாவின் முக்கிய அடையாளமாக மாறியதோடு புகழின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இப்படி இருக்க, கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியான 'பாகுபலி – த பிகின்னிங்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியானது. இதில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
கட்டாரி வீரனின் காவியம் எனக் கூறக்கூடிய அளவில் உருவாகிய இப்படம், திரைக்கதையின் வலிமை, பார்ப்போரின் மனதை மயக்கும் விஷுவல்கள், ஹீரோகளின் வலிமைமிகு காட்சிகள் என ராஜமௌலியின் அனைத்து திறமைகளையும் உள்ளடக்கிய இப்படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது. மேலும் இப்படம் சிறப்பாக அமைய காரணம், படத்தின் ஒளிப்பதிவை கே.கே. செந்தில் குமார் மேற்கொண்டதோடு, எம்.எம். கீரவாணியின் இசையும் ஒரு முக்கிய வலுவாக இருந்தது. குறிப்பாக, “மம்தா செகர்” பாடிய ‘தீவாரா’ பாடல் ஒரு கலாச்சார அழகு கொண்ட இசையாக இன்றுவரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதைவிட இந்த பாகுபலி படத்தின் முதல் பாகம் முடிவில் கேட்கப்பட்ட "கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?" என்ற கேள்வி இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப் பெரிய மாஸ் கிளைமாக்ஸ் ஆக இருந்ததோடு அனைவரையும் இரணடாம் பாகம் வரும்வரை சந்தேகப்பட வைத்தது. இக்கேள்விக்கான பதில் 2017-ம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பாகமான 'பாகுபலி – த கன்கலுஷன்' படத்தில் வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை செய்தது. குறிப்பாக உலகளவில் ரூபாய் 1800 கோடிக்கு மேல் வசூல் செய்து, இந்திய சினிமாவில் யாரும் காணாத பெரிய சாதனையை செய்தது. உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் படம், வெளியாகி 10 ஆண்டு முடிவடைந்த நிலையில் அதன் நினைவாக, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது சமூக வலைதளத்தில் முக்கியமான அப்டேட்டை அறிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “பாகுபலி எனக்கு ஒரு படம் மட்டும் அல்ல; அது ஒரு உணர்வு.
இதையும் படிங்க: விஜய் மாதிரி வருவார் சூர்யா சேதுபதி.. ட்ரோல் கிங்குக்கு வனிதா வக்காலத்து..!
பத்தாண்டுகள் கழிந்த பிறகும், ரசிகர்கள் இதனை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதையொட்டி, இரு பாகங்களையும் ஒரே வடிவில் இணைத்து, ஒரு புதிய அனுபவமாக ‘பாகுபலி – The Epic’ என்ற பெயரில் திரைக்கு கொண்டுவருகிறோம்.” இந்த ரீ-ரிலீஸ் பதிப்பு புதிய 4K திரைத்தரத்தில், மேம்படுத்தப்பட்ட ஒலி மற்றும் காணொளி தரத்தில், படத்தை முன்பே பார்த்தவர்களுக்கும் புதியதாக பார்க்கும் தலைமுறைக்கும் ஒரு புத்துணர்வு அனுபவமாக அமையவுள்ளது. இந்த புது பதிப்பு, உண்மையில் இரு பாகங்களையும் ஒரே நேர்த்தியான ஓட்டத்தில் இணைத்து, ஒரு தனி திரைப்படம் போலவே அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாகுபலி படத்தின் இரு பாகங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய வடிவமான ‘பாகுபலி – The Epic’ என்ற திரைப்படம் 2025 அக்டோபர் 31ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் மீண்டும் வெளியிடப்படுகிறது.
எனவே 'பாகுபலி' என்பது வெறும் ஒரு சினிமா அனுபவம் அல்ல. இது ஒரு பழமையான காவியத்தின் அடிப்படையில் அமைந்த நவீனப்படைப்பு. ராஜமௌலியின் இந்தப் படம் தென்னிந்திய சினிமாவை, பன்னாட்டு அளவிற்கு கொண்டு சென்ற ஒரு அற்புதமான படைப்பாகும். இது கெளரவம் மட்டுமின்றி, சினிமா தொழில்நுட்ப மேம்பாட்டிலும் புதிய மைல்கள் என்றே கூறலாம்.
இதையும் படிங்க: குட்டி தளபதியுடன் போட்டி போடும் விஜய் ஆண்டனி..! 'மதராஸி' படத்துடன் களமிறங்கும் ‘சக்தித் திருமகன்’..!