ஹிட் கொடுக்க இருக்கும் "சென்னை பைல்ஸ் முதல் பக்கம்"...! நடிகர் வெற்றியின் பேச்சு இணையத்தில் வைரல்..!
நடிகர் வெற்றியின் சென்னை பைல்ஸ் முதல் பக்கம் படத்தின் இசைவெளியீட்டு விழா விமர்சையாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் திரைப்படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ படம் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்தப் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், படத்தின் அதிகாரப்பூர்வ இசை ஆல்பத்தை வெளியிட்டு, படக்குழுவினரிடம் இசை சீடியை வழங்கினர். விழாவில், திரைப்படக் குழுவினர் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும், ஊடகங்களும், ரசிகர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்' திரைப்படம், தற்போது திரைப்பட உலகில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஒரு கிரைம்-த்ரில்லர் வகை படம்.
இதில் நடிகர் வெற்றி, கதையின் நாயகனாக நடிக்க, ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, மகேஷ் தாஸ், சுபத்ரா, அனிகா, நயனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்-திரைப்படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் ஏ.ஜி.ஆர். இந்த படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிக்க, மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகின்றது. இணை தயாரிப்பாளராக சாண்டி ரவிச்சந்திரன் பணியாற்றியுள்ளார். திரைப்படத்தின் சண்டை பயிற்சி இயக்குநர் நூர், பாடலாசிரியர்கள் மற்றும் டிரெண்ட் மியூசிக் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர். இந்த நிலையில், விழாவில் பேசிய நடிகர் வெற்றி பேசும்பொழுது, "‘சென்னை பைல்ஸ் – முதல் பக்கம்’ படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்த இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். அவர் இயக்கிய குறும்படத்தை பார்த்ததும், அவரின் திறமை மிகவும் அருமையாக பளிச்சிட்டது. அதனால் தான் அவரிடம் முழு நம்பிக்கை வந்தது.
சொன்ன நாட்களில், எந்த தாமதமும் இன்றி, படப்பிடிப்பை முடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், நீண்ட நாட்களுக்குப் பிறகு, உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் வகை படமொன்று உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் குடும்பமாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். திரையில் அந்த பாசம், பிணைப்பு மற்றும் தொழில்முறை நெருக்கம் நிச்சயமாக பிரதிபலிக்கும். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து, ரசித்து, ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என உருக்கமாக தெரிவித்தார். அடுத்ததாக பேசிய, ஷில்பா மஞ்சுநாத், "இந்த படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரம் எனக்கு புதியவையாக இருந்தது. ஒரு பெண்ணின் மனநிலை, அவளது பயம், துணிவு மற்றும் உணர்ச்சிகளை இயக்குநர் நுட்பமாக கையாள்ந்துள்ளார். ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என நம்புகிறேன்" என கூறினார்.
இதையும் படிங்க: தனது கணவரை பிரிந்தாரா நடிகை ஹன்சிகா..! வேதனையை பகிர்ந்து வரும் பிரபலங்கள்..!
அடுத்ததாக பேசிய தம்பி ராமையா, தனது வழக்கமான நகைச்சுவையை ஓரமாக வைத்து, மிகவும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இசை அமைப்பாளர் ஏ.ஜி.ஆர் பேசுகையில், "இந்தப் படம் எனக்கு ஒரு முக்கியமான வாய்ப்பு. இசையைச் சுமூகமாக அல்ல, படத்தின் உணர்வுகளோடு நெருக்கமாக அமைத்தோம். அந்த உணர்வுகளை இசை கேட்பவர்கள் உணர்வார்கள்" என்றார். இப்படி இருக்க, ஆகஸ்ட் 1-ம் தேதி, இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது பல மாறுபட்ட படைப்புகள் உருவாகி வரும் நிலையில், ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படம், வித்தியாசமான மையக்கருத்தையும், நவீன திரைக்காட்சிகளையும் கொண்டது என்பதற்கான நம்பிக்கையை இசை வெளியீட்டு விழா ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நடிகர் வெற்றி, இயக்குநர் அனீஸ், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் சேர்ந்து, ஒரு நேர்மையான மற்றும் ரசனையைத் தூண்டும் படமாக இதை உருவாக்கியுள்ளார்கள்.
இதையும் படிங்க: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டு கொலை..! தர்மஸ்தலா கோவில் விவகாரம் குறித்து நடிகை ரம்யா காட்டம்..!