தனது கணவரை பிரிந்தாரா நடிகை ஹன்சிகா..! வேதனையை பகிர்ந்து வரும் பிரபலங்கள்..!
நடிகை ஹன்சிகா தனது கணவரை பிரிந்து விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் ‘சின்ன குஷ்பு’ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அவருடைய இளமை வயதில் நடித்த ஐரா சோப் ஒப்பாரி, விளம்பரங்கள் மற்றும் பாலிவுட் சினிமா வாயிலாகத் தான் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், தென்னிந்திய சினிமாவில் தனது அழகு, திறமை மற்றும் மயக்கும் நடிப்பால் முன்னணி கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்தார். இப்படி இருக்க, தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஹன்சிகா, அதன் பின் ‘ஒரு கல் ஒரு கண்ணடி’, ‘தீய வேலை செய்யனும் குமாரு’, ‘எங்கேயும் காதல்’, ‘சேட்டை’, ‘வேலாயுதம்’, ‘வாலு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனக்கான இடத்தை பிடித்த ஹன்சிகா இன்றும் ரசிகர்களின் நட்சத்திர நாயகியாக பார்க்கப்படுகிறார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு புதிய கட்டத்தை தொடங்கினார். அதாவது, கடந்த 2022 -ம் ஆண்டு, தொழிலதிபர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவன உரிமையாளரான சோஹைல் கட்டாரியாவை காதலித்து, ஜெய்ப்பூரில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண விழா இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்குப் பின் ஹன்சிகா தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையைக் கலந்து கொண்டு செம்மையாக தொடர்ந்தார். அவர்கள் திருமணத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, மாறியது. இந்த நிலையில், இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒராண்டு கூட முடியாமல், அந்த ஜோடி இடையே ஏற்பட்ட அதிகப்படியான முரண்பாடுகள் தீவிரமாகி, தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி இருக்க, சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய செய்தி ஒன்றின் படி, ஹன்சிகா தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி, தற்போது தனது அம்மாவுடன் மும்பையில் வசித்து வருகிறாராம். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திருமணத்திற்குப் பின், ஹன்சிகா மற்றும் சோஹைல் “கூட்டு குடும்பமாக வாழ” முடிவு செய்திருந்தனர். அதாவது, சோஹைலின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்துடன் இணைந்து தங்கியிருந்தனர். ஆரம்பத்தில் எல்லாம் சீராக இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் ஹன்சிகாவிற்கு அந்த குடும்ப சூழலுக்கு ஏற்றவாறாக இருப்பதில் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக, தனிப்பட்ட சுதந்திரம் குறைவாக உணர்ந்ததாகவும், வேலை நேரங்கள், குடும்பத்துடன் உள்ள பழக்க வழக்கங்கள் போன்றவை காரணமாகவும் சில கருத்து வேறுபாடுகள் உருவானதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே சிறிய சண்டைகள் ஏற்படத் தொடங்கியதாம். அந்த சண்டைகள் நாளடைவில் அதிகரித்து, மனக்கசப்பாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டு கொலை..! தர்மஸ்தலா கோவில் விவகாரம் குறித்து நடிகை ரம்யா காட்டம்..!
இந்த மனக் கசப்பை தீர்க்கும் முயற்சியாக, சோஹைலின் பெற்றோர்கள், அதே வீட்டின் மேல் மாடிக்கு சென்றதும், இடைவெளி வழங்க முயற்சித்துள்ளனர். இருந்தும், ஹன்சிகா–சோஹைல் உறவு மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பவில்லை என்பது தான் தற்போது வெளிவந்த தகவல். இங்கு குறிப்பிடத்தக்க ஒரு தகவல் என்னவென்றால், சோஹைல் கட்டாரியாவின் முன்னாள் மனைவி ரிங்கி பஜாஜ், நடிகை ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பதும். இந்த தகவல் திருமண நேரத்திலேயே பலரிடையே கேள்விகளை எழுப்பியது. இந்த சூழலில், இந்த பிரிவு சமூகவலைதளங்களில் பரவத் தொடங்கிய நிலையில், இது தொடர்பாக ஹன்சிகா அல்லது சோஹைல் இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதனால், உண்மையில் இருவரும் பிரிந்து விட்டனரா? அல்லது சில தற்காலிக தகராறுகளுக்காகவே பிரிந்து விலகி இருக்கிறார்களா? என்ற கேள்விகள் அதிகம் எழுந்துள்ளது. ஆகவே, ஹன்சிகாவின் ரசிகர்கள் பலரும் இந்த விவகாரத்தில் மிகவும் கவலையுடன் இருக்கிறார்கள். இந்த தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு இடையிலும் ஹன்சிகா தனது திரைப்பட வாய்ப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் ஒரு ஹாரர் ஜானரில் நடித்த ஒரு திரைப்படம் OTTயில் வெளியாகியுள்ளது. மேலும், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் புதிய படங்கள் குறித்த அறிவிப்புகளும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹன்சிகா மற்றும் சோஹைல் பிரிவு குறித்து உண்மை என்ன?, என்ன காரணம்? இவர்களது உறவுக்குள் மீண்டும் பிடிமானம் வருமா? என்பதை காலமே நிரூபிக்கும்.
இதையும் படிங்க: இயக்குநர் கோபி நயினார் மீது வெடித்த அதிரடி குற்றச்சாட்டு...! நிம்மதியாக வாழ விடுங்கள் என உதவி இயக்குனர் ராஜ்கமல் புகார்..!