சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா...! முதல் நாள் வசூலில் 'லியோ' சாதனையை முறியடித்த 'கூலி'..!
முதல் நாள் வசூலில் சூப்பர் ஸ்டாரின் 'கூலி'திரைப்படம் விஜயின் 'லியோ' சாதனையை முறியடித்து உள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான திரைப்படம் தான் 'கூலி'. இந்தப் படம் நேற்று உலகளவில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படம், வெளியாகிய பிறகு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் மட்டும் அது மாஸாகவே இருக்கிறது. ‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதைத் தவிர, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, மலையாளத்தில் பிரபலமான சௌபின் சாஹிர், தமிழில் நீண்ட காலமாக பல முக்கிய வேடங்களில் நடித்துவரும் சத்யராஜ், மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நட்சத்திர பட்டாளம், படம் குறித்த எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரது முந்தைய வெற்றிப் படமான 'விக்ரம்' மற்றும் 'லியோ' மூலமாக, மாஸ் கமர்ஷியல் எண்டர்டெயினருக்கு நம்பிக்கைக்குரிய பெயராக உருவெடுத்தவர். இந்தப் படத்திலும் அதே அழுத்தமான ஃபார்முலாவை தொடர்ந்துள்ளார். ‘கூலி’ படத்திற்கு முன், உலகளவில் தமிழ்த் திரைப்படங்கள் பட்டியலில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் 'லியோ' தான். அது ரூ.148 கோடி வரை வசூல் செய்தது. ஆனால் தற்போது, அந்த சாதனையை முறியடித்து 'கூலி' ரூ.155 கோடி முதல் ரூ.160 கோடி வரை உலகளவில் வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வசூல் சாதனை, திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. காரணம், விமர்சனங்கள் முழுக்க நேர்மறையாக இல்லாத போதிலும், ரசிகர்கள் திரைப்படங்களை போற்றும் வகையில் முதல் நாளில் பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது.
இந்த சூழலில் திரைப்பட விமர்சனங்களைப் பார்க்கும்போது, 'கூலி' கதை திருப்பங்கள், திரைக்கதை அமைப்பு மற்றும் இரண்டாம் பாதியில் சிக்கல்கள் இருப்பதாக சில விமர்சகர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், ரஜினியின் ஸ்கிரீன் பிரெசென்ஸ், அவருடைய ஸ்டைல், மாஸ் டயலாக் டெலிவரி, மற்றும் பாக்ஸ் ஆபிஸ் என அனைத்தையுமே நிரூபிப்பது போலவே அவரது நடிப்பு அமைந்திருக்கிறது. இந்த படத்தின் முதல் அரை மணி நேரம், ரஜினியின் அறிமுகம், ஸ்டைல் மற்றும் அதிரடி போர் காட்சிகள் மூலம் நெஞ்சில் பதற வைக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்க ‘கூலி’ திரைப்படம் தற்போது உலக அளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற புதிய பட்டத்தை பெற்றிருக்கிறது. இந்த அளவுக்குள் வந்த ரூ.160 கோடி என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய வரலாறு. இதை தொடர்ந்து, வார இறுதி மற்றும் பண்டிகை விடுமுறைகள் காரணமாக இப்படத்தின் வசூல் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'கூலி' படத்துக்கு டிக்கெட் வேணுமா.. இவ்வளவு கொடுங்க..! புதிய ஸ்கேம்.. சிக்கிடாதீங்க மக்களே..!
அதுமட்டுமல்லமால் உலகளாவிய ரிலீஸ் நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இருப்பதால் படம் ரூ.1000 கோடியை நெருங்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத், அவரது BGM மற்றும் மாஸ் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ரஜினியின் ‘ஏறிப்பா’ என தொடங்கும் மாஸ் பாடல், பாடலுக்கும், நடனத்துக்கும் ரசிகர்கள் பீச்சில் ஆட்டம் போட்ட மாதிரி திரையரங்குகளில் கொண்டாடினர். கதையின் தன்மையை விட, படம் முழுக்க ரஜினியின் ஹாலிவுட் ஸ்டைல் ஸ்டண்ட் சீன்கள், செட் டிசைன், மற்றும் லோகேஷின் டீசர்-ட்ரெய்லர் ஹைப்கள் தான் ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் அது ஒரு ரஜினி ரெக்கார்டை உருவாக்கியுள்ளது.
உலகளவில் ரூ.160 கோடி வசூலுடன், தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய துவக்க சாதனையை பதிவு செய்திருக்கிறது. இப்படம் வரும் நாட்களில் மேலும் என்னென்ன சாதனைகளை நோக்கி பயணிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காணலாம்.
இதையும் படிங்க: நாளை திருவிழாவாக மாற போகும் திரையரங்குகள்..! "கூலி" படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!