×
 

'கூலி' படத்துக்கு டிக்கெட் வேணுமா.. இவ்வளவு கொடுங்க..! புதிய ஸ்கேம்.. சிக்கிடாதீங்க மக்களே..! 

'கூலி' படத்துக்கு டிக்கெட் தருகிறோம் என புது ஆன்லைன் மோசடி நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ‘கூலி’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஹிட் மேக்கர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், நாளை பான் இந்திய ரீதியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பரபரப்பும், எதிர்பார்ப்பும் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில், படம் தொடர்பான தகவல்களும், ரசிகர்களிடையே நிலவும் ஆராவமும் இந்த நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

ஆகவே ‘கூலி’ திரைப்படம் ஒரு முழுமையான ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. ரஜினிகாந்தின் மாஸ் ஸ்க்ரீன் பிரெசென்ஸ், அனிருத் இசையில் துள்ளும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக் கூட்டணி, லோகேஷ் கனகராஜின் திரைக்கதை தைரியம், தமிழ் சினிமாவை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் வெறும் ரஜினிகாந்த் மட்டுமல்ல, இந்திய சினிமாவின் பல முக்கியமான நடிகர்கள் இணைந்துள்ளனர்.  அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், பகத் பாசில், சவுபின் ஷாஹிர், ரெபா மோனிகா ஜான், மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்தனை நடிகர்களின் சேர்க்கை, படம் இந்தியாவின் பல மொழி ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இருப்பதை உறுதி செய்கிறது. இசை அமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர், ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து உள்ளார். அவரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, ‘கூலி’ திரைப் படத்திற்காக சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ரிலீஸ் நாளான 14-ம் தேதி, திரையரங்குகளில் அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, முதல் காட்சி: காலை 9 மணிக்கு தொடங்கி  இறுதி காட்சி: நள்ளிரவு 2 மணி வரையாக இருக்கிறது. இது படம் வெளியான தினமே முழு நாளும் கொண்டாடும் திருவிழா போன்று மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘கூலி’ திரைப்படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களாகவே மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் அந்த அளவிற்கு ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், திரைப்பட டிக்கெட்டுகள் சில இடங்களில் வசதிக்கேற்ப இல்லாத விலையில் விற்கப்படுகின்றன. சில திரையரங்குகளில் ரூ.500க்கு ஆரம்பித்து சில பிரைவேட் திரையரங்குகளில் ரூ.1,500 வரை விற்கப்படுகிறதாம். ரசிகர்கள் அதிகம் உள்ள இடங்களில் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரைக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறதாம். இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் மற்றும் புகார்கள் எழுந்துள்ளன. முன்பதிவுக்குப் போக முடியாத ரசிகர்கள், இரண்டாம் நிலையான black ticketing சந்தைகளில் டிக்கெட் வாங்க முயற்சி செய்யும் போதே, போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. பல்வேறு வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் டெலிகிராம் சேனல்களில், பட்டாசு Rateல Ticket, Exclusive Show Entry, Backdoor Pass எனப்படும் வகைகளில், போலி வலைத்தளங்கள் மற்றும் QR குறியீடுகள் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படியாக புகார்கள் பெறப்பட்ட பின்னர், சில சைபர் கிரைம் காவல்துறைகள் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டுள்ளன.

இதையும் படிங்க: நாளை திருவிழாவாக மாற போகும் திரையரங்குகள்..! "கூலி" படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

மக்கள் உண்மையான ஆன்லைன் வணிக தளங்களிலேயே டிக்கெட்டுகளை வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திரைப்படத்தை பத்திரமாக மற்றும் அனுபவிக்கக்கூடிய முறையில் பார்க்க, ரசிகர்கள் முன்பதிவு தளங்களை தேர்வு செய்யும்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நம்பகமற்ற மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் இருந்து டிக்கெட் வாங்குவது, பண இழப்பிற்கு வழிவகுக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. படம் வெளியாகும் நாளன்று, திரையரங்குகள் மற்றும் மாநகர காவல்துறைகள் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அதிக வாகன நெரிசலும், ரசிகர் கூட்டமும் எதிர்பார்க்கப்படும் பகுதிகளில், போக்குவரத்து கட்டுப்பாடுகள், சீட் வசதிகளுக்கான முன்னேற்பாடுகள், தடங்கல்கள் ஏற்படாமல் செய்யும் வசதிகள், அவசர பாதுகாப்பு குழு தயார் நிலையில் வைத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் ரஜினிகாந்த் படம் என்றாலே ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழா. 'கூலி' படம் என்பதாலேயே பலர் முன்னமே பட்டாசுகள், ஸ்டிக்கர்கள், பேனர், பாஷன் அணிவகுப்பு என தங்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், குடும்பங்கள், மற்றும் நண்பர்கள் குழுக்கள் என பெரும் ரசிகர் கூட்டம் ‘கூலி’ படம் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கின்றனர்.

ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’, தமிழ் சினிமா ரசிகர்களுக்கான மிக முக்கியமான திருவிழா போன்று மாறியிருக்கிறது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், அனிருத் இசையில், பல மொழி நட்சத்திரங்கள் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வெறும் சினிமா அனுபவம் மட்டுமல்ல.. ஒரு கலாசார நிகழ்வாகவே மாறிவிட்டது. ஆனால், இப்படத்தை பார்க்கும் ஆர்வம், பொறுமையுடன் மற்றும் நியாயமான முறையில் நடைபெற வேண்டும். போலி டிக்கெட்டுகள், அதிக விலைக் கொடுமைகள், சட்டவிரோத சந்தைகள் இவற்றை தவிர்த்து, உண்மையான ரசிகராக சினிமாவை அனுபவிக்க வேண்டும் என்பதே தற்போதைய சமூகத்தின் தேவையாக உள்ளது.
 

இதையும் படிங்க: "கூலி" திரைப்பட வெளியீட்டிற்கு தடை..! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share