×
 

விருது வழங்கும் விழாவில் மாஸ் காட்டிய மோகன்லால்..! தனது பேச்சால் கர்வத்தை உண்டாக்கிய அந்த காட்சிகள் வைரல்...!

விருது வழங்கும் விழாவில் தனது பேச்சால் நடிகர் மோகன்லால் கர்வத்தை உண்டாக்கும் அளவிற்கு பேசியிருக்கிறார்.

இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது, தேசிய அளவில் சினிமா கலைக்காக அளிக்கப்படும் வாழ்நாள் சாதனை விருதாகும். 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தமது பதினைந்தாண்டுகளுக்கும் மேற்பட்ட திரைப்பயணத்தில், பல்வேறு மொழிகளில் செய்த கலையின் சேவைக்காக இந்திய அரசின் மிக உயரிய திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார்.

விருதுகள் விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விருது வழங்கும் தருணத்தில், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். மோகன்லால், மிகவும் நெகிழ்ச்சியுடன் விருதை பெற்றுக் கொண்டார். பின்னர், மோகன்லாலின் திரைப்பயணத்தை விவரிக்கும் சிறப்பு காணொளி ஒன்று அரங்கில் ஒளிபரப்பப்பட்டது. பின் திரௌபதி முர்மு, மோகன்லாலுக்கு விருதை வழங்குவதற்கு முன்பு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இதனை அடுத்து மோகன்லால் பேசுகையில், “மலையாளத் திரைப்படத்துறையின் பிரதிநிதியாக, இந்த தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்கிறேன்.

மாநிலத்திலிருந்து இந்த விருதை பெறும் இரண்டாவது நபராக பணிவுடன் ஏற்கிறேன்.  இந்த விருது என்னுடையது மட்டும் அல்ல, மலையாள சினிமாவின் பெருமை, மரபு மற்றும் படைப்பாற்றலுக்கு கிடைத்த மரியாதையாகக் கருதுகிறேன். தாதா சாகேப் பால்கே விருதுக்கு நான் தேர்வாகியதை மத்திய அரசு அறிவித்தபோது, அது வெறுமனே பெருமை இல்லை.. இது எங்கள் சினிமா பாரம்பரியத்தின் குரலாக என்னை தேர்வு செய்ததற்கு கிடைத்த அங்கீகாரம் என உணர்ந்தேன். உண்மையாகவே இந்த தருணத்தை கனவில்கூட நான் நினைத்ததில்லை. இது எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த சிறப்புக் கணமாகும்” என்றார்.

இதையும் படிங்க: நீங்க நினைக்கிற மாதிரி.. நான் ஒன்னும் பாக்யராஜ் அல்ல..! தனது பேச்சால் அனைவரையும் ஷாக் ஆக்கிய நடிகர் சாந்தனு..!

மோகன்லால் – ஒரு சினிமா ஜாம்பவான் தான்.  இதுவரை அவர் நடித்த திரைப்பட எண்ணிக்கை மட்டும் 350-க்கும் மேல் இருக்கும். அதிலும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து, தேசிய விருதுகளான, சிறந்த நடிகருக்கான 2 தேசிய திரைப்பட விருதுகள், 9 கேரள மாநில திரைப்பட விருதுகள், பல சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். அத்துடன் 2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ, 2019 -ம் ஆண்டு பத்ம பூஷண் பெற்றுள்ளார். இந்த விருதின் மூலம், மலையாள சினிமா தேசிய அளவில் மீண்டும் ஒருமுறை அளவிட முடியாத பாராட்டைப் பெற்றிருக்கிறது.

இது ஒரு நடிகருக்கான விருதாக இல்லாமல், ஒரு சினிமா பாரம்பரியத்திற்கு வழங்கப்படும் அங்கீகாரமாக அமைந்துள்ளது. முன்னர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் பட்டியலில் இருந்தவர், எஸ். சிவாஜி கணேசன், 1997ம் ஆண்டு பெற்றார். அடுத்து ரஜினிகாந்த் 2021-ம் ஆண்டு பெற்றார். அடுத்து அமிதாப் பச்சன் 2019 -ம் ஆண்டு பெற்றார். கே. பாலசந்தர் 2010 - ம் ஆண்டு பெற்றார். இங்கு, மோகன்லால் இரண்டாவது மலையாள நடிகராக தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார். ஆகவே மோகன்லாலின் இந்த தாதா சாகேப் பால்கே விருது வெற்றியால், இந்திய திரைப்படம் மட்டுமல்லாமல், மலையாள சினிமாயும் ஒரு சிறந்த கலையின் பாரம்பரியம் கொண்டது என்பதற்கு மீண்டும் ஒருமுறை சான்று கிடைத்திருக்கிறது.

தனது சாதனைகள், நம்பிக்கைகள், அர்ப்பணிப்புகள் மற்றும் உழைப்பின் மூலம், மோகன்லால் ஒரு நடிகரைத் தாண்டி, ஒரு காலத்தையும் பிரதிநிதிக்கிறார். இவ்விருது, ஒரு பொதுவான பாராட்டாக மட்டுமல்லாமல், நம் திரைத்துறையின் ஒவ்வொரு சோதனைக்கும் அவர் அளித்த பதிலுக்கான ஒரு மனப்பூர்வமான மரியாதை எனச் சொல்லலாம்.

இதையும் படிங்க: படம் சூப்பரா இருக்கும் போலயே..! கோடிகளை கொடுத்து "ஆண்பாவம் பொல்லாதது" படத்தின் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share