யாரை கேட்டு 'ராஞ்சனா' திரைப்பட கிளைமாக்ஸை மாத்துனீங்க..! கடும் அதிருப்தியில் நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிக்கை..!
'ராஞ்சனா' திரைப்பட கிளைமாக்ஸை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக மாற்றியதற்கு நடிகர் தனுஷ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பல்வேறு மொழிகளில் தனது தனித்துவமான நடிப்பால் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகர் தனுஷ். இவர் ஹிந்தித் திரையுலகிற்கான அறிமுக படமான ராஞ்சனாவின் மறு-வெளியீட்டில் ஏற்பட்ட மாற்றங்களைத் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2013-ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம், தனுஷின் திரைப்படப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக இருந்தது. அந்த காலத்திலேயே அவர் ஹிந்தி பேசும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இப்படத்தின் மூலமாக பெற்றார். இப்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஞ்சனா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், ஒரு பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது.
ஏனெனில், இந்த திரைப்படத்தின் முக்கியமான பகுதியாக இருந்த கிளைமாக்ஸ், Artificial Intelligence என்று சொல்லக்கூடிய AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. புதிய முறையில் மாற்றப்பட்ட இந்த கிளைமாக்ஸ், ஒரு சில மாநிலங்களில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபுறம், சிலர் இந்த முயற்சியை தொழில்நுட்ப முன்னேற்றமாக பார்ப்பதற்குள், திரைப்படத்தின் உணர்வுப் பார்வை முற்றிலும் மாறி விட்டதாக மற்றொரு பகுதியில் விமர்சனம் செய்து வருகிறது. இதே நிலையில், இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நடிகர் தனுஷ், மிகுந்த வேதனையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தனுஷ் வெளியிட்டுள்ள ஆங்கில அறிக்கையில், "ராஞ்சனா திரைப்படத்தின் ஏஐ மூலமாக மாற்றி அமைக்கப்பட்ட கிளைமாக்ஸை கொண்ட ரீ-ரிலீஸ் என்னை முற்றிலும் பாதித்துவிட்டது. மாற்றப்பட்ட அந்த கிளைமாக்ஸ், அந்த திரைப்படத்தின் ஆத்மாவையே பறித்து விட்டது. நான் எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் இதை செய்து இருக்கிறார்கள். இது 12 வருடங்களுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட திரைப்படம் அல்ல. திரைப்படங்கள் அல்லது உள்ளடக்கங்களை ஏஐ மூலம் மாற்றுவது என்பது கலைக்கும் கலைஞர்களுக்கும் மிகவும் கவலைக்கிடமான முன்னுதாரணமாக இருக்கிறது. இது கதைக்களத்தைச் சொல்லும் முறையையும் சினிமாவின் பாரம்பரியத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. எதிர்காலத்தில் இதை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என நான் உண்மையாக நம்புகிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இப்படி இருக்க தனுஷ் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது போல், ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் சினிமாவில் உதவியாக இருக்கும் போது, அதன் தவறான பயன்பாடுகள் சினிமா கலைஞர்களின் ஒழுங்கையும் அடையாளத்தையும் பாதிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு நடிகர் மற்றும் கலைஞர் தாங்கள் ஒப்புக்கொண்ட காட்சிகள், உரையாடல்கள் மற்றும் கதையின் முடிவுகள் குறித்த தங்களது கலைநிலை மாற்றப்படுவது, அவர்களது பெயருக்கும் கதைக்குமான சுதந்திரத்திற்கும் விரோதமாக அமையும்.
இதையும் படிங்க: பிரியங்காவுடன் மீண்டும் பேசுகிறாரா மணிமேகலை..! அதிரடி பதிலால் அசரவைத்த தொகுப்பாளினி..!
இந்த நிலையில், எதிர்காலத்தில் இப்படியான மாற்றங்களை ஏற்க முடியாது என தைரியமாகக் கூறியிருக்கும் தனுஷின் இந்த நடவடிக்கைக்கு திரையுலகினரிடையே ஆதரவும், பாராட்டும் உருவாகியுள்ளது. ஆகவே AI தொழில்நுட்பம் தற்போது உலகளவில் பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சினிமா போன்ற கலைத் துறைகளில் அது நேர்மையாகவும், கலைஞர்களின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரது வேண்டுகோளாக உள்ளது. திரைக்கதை, கதையின் திருப்பங்கள், மற்றும் கலைஞர்களின் ஒப்புதல் இல்லாமல் காட்சிகளை மாற்றுவது, எதிர்காலத்தில் கலைமுறையை நொறுக்கக்கூடியதாக இருக்கலாம். எனவே தான் தனுஷின் இந்த அறிக்கை, சினிமா துறையில் ஏஐ கொண்டு உருவாகக்கூடிய சிக்கல்களுக்கான மிக முக்கியமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. “கலைஞர்களின் ஒப்புதலின்றி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கலைச் சுதந்திரத்தை மாற்றுவது மிகுந்த ஆபத்தான செயலாகும்” என்பதையே அவர் வலியுறுத்துகிறார்.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல. அது ஒரு கலையும், கலைஞர்களின் உழைப்பின் வெளிப்பாடும் தான். அதனை மாற்றும் முன், அவர்களது ஒப்புதல், உணர்வு மற்றும் நோக்கங்களை மதிக்க வேண்டியது நம் கடமை. ஆகேவ தனுஷ் வலியுறுத்தியபடி, எதிர்காலத்தில் இப்படியான செயல்களை தடுக்க, இந்திய திரைப்படத் துறையிலும் முறையான சட்டங்கள் வரவேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING பிரபல நடிகர் மதன்பாப் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!