பிறந்தநாளில் ரஜினியை பிரதிபலிக்க செய்த தனுஷ்..! மாலை அணிவித்து மகிழ்ந்த ரசிகர்கள் பேச்சு..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணியில் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் நடிகர் தனுஷ்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் தனுஷ், இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவராக இருப்பதால் இவருக்கு, சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் நேரில் வரும் ரசிகர்களிடமிருந்தும் அன்பும் வாழ்த்துகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்த பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனுஷின் இல்லத்தில் அவரை நேரில் பார்வையிட ஏராளமான ரசிகர்கள் காலை முதலே கூடத் தொடங்கினர்.
பலர் அவரது புகைப்படங்கள், பேனர், பதாகைகள் மற்றும் கேக் வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடினர். இதற்கு பதிலாக, தனுஷ் தனது இல்லத்தின் முற்றத்தில் வந்து, அனைவரிடமும் கையசைத்து நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, ரசிகர்கள் உற்சாகத்தில், தனுஷுக்கு பெரிய ரோஜா மாலை அணிவித்து அவரை மகிழ்ச்சியடையச் செய்தனர். இந்த நிகழ்வின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. ரசிகர்கள், "தனுஷ் எங்கள் ஹீரோ, எங்கள் அன்பின் நாயகன்" என உற்சாகமாக சத்தமிட்டதும், இடையே "ஹேப்பி பர்த்டே தனுஷ்" என கூச்சலிட்படி இருந்தனர்.
இந்த சூழலில், இணையத்தில் சிலர், தனுஷின் இந்த நடத்தை மற்றும் ரசிகர்களுடன் அவரது நேரடி உறவை பார்த்து, அவர் மாமனார் ரஜினிகாந்தின் பாதையை தனுஷும் பின்பற்றுகிறார் என விமர்சனத்தோடு பாராட்டும் கருத்துக்களும் பதிவாகி வருகின்றன. "ரஜினியின் பிறந்த நாளில் ரசிகர்கள் அவரை பார்த்துவிட்டு மகிழ்ந்தாலும், அவர் எப்போதும் அவர்களிடம் நேரடியாக வந்து கையசைத்துப் போவார். அதேபோல தான் தனுஷும் இன்று நடந்து கொண்டார்" என பலரும் கூறியிருகின்றனர். மேலும் சிலர், "தனுஷ் சினிமாவில் தனது சொந்த அடையாளத்தை உருவாக்கி விட்டாலும், ரஜினிகாந்தின் தாக்கம் அவரின் நடையில், ரசிகர்களிடம் காட்டும் மரியாதையில் தெளிவாகவே தெரிகிறது" என பதிவிட்டு வருகின்றனர். மேலும், தனுஷின் ரசிகர் மன்றம் சார்பாக, அவரது சமூகப்பணிகள், கல்விக்கான நிதியுதவி, மருத்துவ முகாம்கள் போன்ற பல உதவிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனுஷின் 'குபேரா' படம் வெற்றியா.. தோல்வியா..? ரிசல்ட்டை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்..!
அதேபோல, பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் பலர் ரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல், மற்றும் உணவு வழங்கும் திட்ட உதவிகளை நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். இதுவும் தனுஷ் ஏற்படுத்திய சமூக மாற்றங்களை சுட்டிக்காட்டும் ஒரு முக்கியத்துவமான அம்சமாகக் காணப்படுகிறது. இப்படி இருக்க, தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தனது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் அனிருத், நடிகை தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளனர். தற்போது தனுஷ் பல படங்களில் பிஸியாக உள்ளார்.
இந்தக் கொண்டாட்டங்கள் அனைத்தும் சேர்ந்து, இந்த பிறந்தநாளை தனுஷ் மட்டுமல்ல, அவரின் ரசிகர்களும் நிச்சயமாக மறக்கமுடியாத நாளாகக் கொண்டாடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!