நான் வாந்தி எடுக்க காரணம் ஸ்விகி நிறுவனம் தான்..! வீடியோ வெளியிட்டு கொந்தளித்த நடிகை சாக்சி அகர்வால்..!
நடிகை சாக்சி அகர்வால் நான் வாந்தி எடுக்க காரணம் ஸ்விகி நிறுவனம் தான் என வீடியோ வெளியிட்டு கொந்தளித்துள்ளார்.
சமீப காலமாக சமூக ஊடகங்களில் உணவு விநியோக செயலிகள் மூலம் நிகழும் தவறுகள் தொடர்பான பல புகார்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தமிழ், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகாரால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதன்படி நடிகை சாக்ஷி தனது "எக்ஸ்" பக்கத்தில், ஓர் உணவுப் புகார் பதிவிட்டார்.
இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வன்' பட பாடல் விவகாரத்தில் புதிய திருப்பம்..! உச்ச நீதிமன்ற உத்தரவால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஏ.ஆர் ரகுமான்..!
அதில், "நான் ஸ்விக்கி மூலமாக பனீர் (சைவம்) ஆர்டர் செய்தேன். ஆனால், எனக்கு வந்த உணவில் சிக்கன் (அசைவம்) இருந்தது" எனக் குற்றம்சாட்டினார். இதைப் பார்த்த பலர் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததோடு, சிலர் விமர்சனங்களும் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, இது ஒரு சாதாரண உணவுப் பிழையா? அல்லது மத உணர்வுகளைத் தாண்டி ஒரு தனியுரிமை மீறல் என்று பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கினர். அதன்படி சாக்ஷி அகர்வால் வெளியிட்டிருந்த முதற்கட்டக் குற்றச்சாட்டு என்னவெனில், "நான் சைவம் மட்டுமே சாப்பிடுகிறேன். ஆனால் எனது ஆர்டரில் சிக்கன் இருந்தது. இது போன்ற தவறுகள் சகிப்புத்தன்மைக்கு அப்பாலானவை. ஸ்விக்கி பதில் சொல்லியே ஆக வேண்டும்" என கூறியிருந்தார்.
இக்குற்றச்சாட்டிற்கு பல்வேறு மதவாத கோணங்களில் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, சாக்ஷி தற்போது தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அதில் "நான் ஆர்டர் செய்த உணவில் மோசமான வாசனை வந்தது. பனீராக இல்லாமல் வித்தியாசமான சுவை இருந்ததால் சோதித்தபோது, அது சிக்கன் என்பதற்குப் பிறகு வாந்தி எடுத்து விட்டேன். இது சைவம்/அசைவம் உண்பவர்களுக்குள் முரண்பாடு அல்ல. இது மதம் சார்ந்த பிரச்சனை அல்ல. இது ஒரு வாடிக்கையாளர் மற்றும் சேவை வழங்குநருக்குள் ஏற்பட்ட தவறு. உணவு என்பது ஒருவரின் தனியுரிமை, உணர்வு, நம்பிக்கை மற்றும் கலாசாரம் சார்ந்த விஷயம். நான் சைவ உணவைத் தேர்வு செய்திருப்பது என் உரிமை. அந்த உரிமை மீறப்படுவது எதற்கும் உரியதல்ல" என்றார். அவர் கூறியதை போலவே உணவு என்பது தனிப்பட்ட தேர்வாகவே பார்க்கப்படுகிறது. உணவின் வகையை தேர்வு செய்வதில் தனிநபர் உரிமை மீறப்படும்போது, அது மனித உரிமை மீறலாகவும் கருதப்படும்.
I have never eaten non-vegetarian food in my life actress sakshi agarwal - Video Link - click here
பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை சரியாகப் பாதுகாத்து வழங்க வேண்டும் என்பது அவர்களது சட்டப்பூர்வ கடமை. இந்த வழக்கில் சாக்ஷி எந்தவித மதவாத கருத்தும் முன்வைக்க வில்லை என தெரிவிக்கிறார். அதே சமயம், உணவு தேர்வின் மீதான மதப் பின்னணியையும் அவர் உணர்த்தியுள்ளார். இப்படி இருக்க இந்நேரம் வரை ஸ்விக்கி நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது மன்னிப்புக் கோரிய அறிக்கையை வெளியிடவில்லை. எனினும், வாடிக்கையாளர் சேவை சார்பில் சில தனிநபர் பதில்கள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் மையங்களில் திரட்டப்பட்ட தகவலின்படி, சில ஊழியர்கள் தொடர்பு கொண்டு "மன்னிப்பு" கேட்டுள்ளனர். ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிக்கையாக இருக்கவில்லை. இதே போன்று, கடந்த ஆண்டுகளில் பல சாமானிய வாடிக்கையாளர்களும் உணவுப் பயன்பாட்டு செயலிகளிடம் எதிர்மறை அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
ஆகவே சாக்ஷி அகர்வால் எழுப்பிய இந்த உணவுப் புகார், ஒரு சிறிய சம்பவமாகத் தோன்றினாலும், அதன் பின்னணி மிகவும் ஆழமான சமூக, கலாசார மற்றும் சட்டக்கோணங்களை உள்ளடக்கியதாகும். உணவுத் தேர்வும், நம்பிக்கையும் ஒருவரின் தனியுரிமை மட்டுமல்ல, அது சமூக நெறிமுறைகளுடன் சிக்கியுள்ள உணர்வுப் பகுதியாகவும் இருக்கிறது. எனவே அந்த அடிப்படையில், வாடிக்கையாளர் உரிமையை மதிக்காத எந்த நிறுவனமும், தனது பொறுப்பில் தடுமாறக் கூடாது என்பது இச்சம்பவத்தின் முக்கியமான பாடமாகும்.
இதையும் படிங்க: விருது வழங்கும் விழாவில் மாஸ் காட்டிய மோகன்லால்..! தனது பேச்சால் கர்வத்தை உண்டாக்கிய அந்த காட்சிகள் வைரல்...!