வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

ரெட்ரோ ஆக்ஷன் படம் அல்ல… யாரும் பார்க்காத காதல் படம்..! உண்மையை உடைத்த கார்த்திக் சுப்புராஜ்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ரெட்ரோ படத்தை குறித்து பேசியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

தமிழில், ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பை கொடுத்த படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  விஜய் சேதுபதி , நவாசுதீன் சித்திக் , சசிகுமார் , சிம்ரன் , த்ரிஷா கிருஷ்ணன் , மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் , மகேந்திரன் , பாபி சிம்ஹா , குரு சோமசுந்தரம் , ஆடுகளம் நரேன் , முனிஷ்காந்த் , விவேக் சனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான "பேட்ட".

இத்திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அதே போல் இப்படத்தை இயக்கிய, கார்த்திக் சுப்புராஜை தெரியாதவர்களும் யாரும் இருக்க முடியாது. இவரது இயக்கத்தில் உருவாகும் படங்களில் இசைகள், விஷுவல் காட்சிகள், மற்றும் லைட்டிங் காட்சிகள் என அனைத்தும் அருமையாக இருக்கும். 

இப்படி படங்கள் என்றால் வெறித்தனமாக எடுக்க நினைக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ரெட்ரோ" படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படம் சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பது கூடுதல் ட்ரீட்டாக உள்ளது.
ஏற்கனவே, ரெட்ரோ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மே மாதம் 1ம் தேதி படம் வெளியாகும் என்ற அப்டேட்டை Ghibli ஸ்டைலில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இருவரும் வீடியோவாக கொடுத்தனர்.

இதையும் படிங்க: நான் வெயிட் லாஸ் பண்ண காரணம் இந்த ஹீரோயின் தான்…! 3 மாதத்தில் நடந்த அதிசயம்..! நடிகை ஜோதிகா பேச்சு..!

அந்த வீடியோவில், சூர்யா பேசும்போது, " ரெட்ரோ டப்பிங் முடுஞ்சுது, கட்…அண்ட்…ரைட்டு" என பேசுகிறார். அதற்கு பின்னர் டப்பிங்கின் போது சூர்யாவுக்கு அருகில் கார்த்திக் சுப்புராஜ் நின்று கொண்டு இருக்கிறார். இருவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை Ghibli ஸ்டைலில் மாற்றி அசத்தியிருந்தனர். இப்படிப்பட்ட அதிரடியான அப்டேட் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ், தற்பொழுது படத்தை குறித்து மனம் விட்டு பேசியுள்ளார்.

அதில், 'ரெட்ரோ' என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கின்ற ஒரு 'காதல் கதை' என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை வைத்துள்ளோம். இது நீங்கள் நினைப்பதை போல் கேங்ஸ்டர் படம் அல்ல. அழகான காதல் படம். ஆதலால் இப்படத்தில் ஆக்ஷனும் உண்டு, மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு. மேலும், ரெட்ரோ படத்தில் சூர்யா, "பாரிவேல் கண்ணன்" என்ற கேரக்டரில் நடிக்கிறார். கதை பல இடங்களில் நடப்பதால் பல தோற்றங்களில் அவர் வருவார். 

படத்தில் கோபம், அடிதடி என்று வாழ்ந்து, தனக்கான இலக்கு என்ன என்று தெரியாமல் ஓடும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் அன்பாலே அவன் தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்வதும், அந்தப் பெண்ணுக்காக வரும் பெரிய பிரச்சனையை தீர்த்து வைப்பதுமான மிரளவைக்கும் கதை. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பூஜாவின் கேரக்டர் பெயர் ருக்மணி. படத்தின் பெரும்பாலான கதை அந்தமானில் நடக்கிறது. தினமும் பல மைல் தூரம் படகில் சென்று ஆளே இல்லா தனி தீவில் தான் இந்த காட்சிகளை படம் ஆக்கினோம். ஒரு சில படப்பிடிப்பு வாரணாசியிலும் நடந்தது. 

மேலும், இந்த படம் நிச்சயமாக நான் இதுவரை எடுத்த கதைகளை போல் அல்லாமலும், சூர்யாவின் நடிப்பில் மக்கள் பார்க்காத முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவும் இருக்கும் என்றார்.

இதையும் படிங்க: சூர்யா கொடுத்த Ghibli ஸ்டைல் அப்டேட்..! வெறித்தனமாக களமிறங்கும் "ரெட்ரோ"…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी