×
 

வெளியானது 'பன் பட்டர் ஜாம்' படத்தின் 'காஜுமா பாடல்'..! ரசிகர்களை அதிரவைத்த அதிதி ஷங்கர் குரல்..!

அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்த 'பன் பட்டர் ஜாம்' படத்தின் 'காஜுமா பாடல்' அதிதி ஷங்கர் குரலில் வெளியானது.

பிக்பாஸ் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் நடிகர் ராஜு ஜெயமோகன். இவர் நிகழ்ச்சியில் தனது நேர்மையான பேச்சு, நகைச்சுவை உணர்வும், நேர்மையான மனிதரென பார்க்கப்பட்ட சுதந்திரமான நடத்தை ஆகியவற்றால் அதிகப்படியான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். தற்போது அவர் தனது புதிய அத்தியாயத்தை திரைத்துறையில் தொடங்கியுள்ளார் என்று தான் சொல்லமுடியும். காரணம் இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தின் மூலம் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.

மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இசைஞானி நிவாஸ் கே.பிரசன்னா அமைத்துள்ளார். இவர் மெல்லிசை, மற்றும் காதல் பாடல்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். இப்படி இருக்கையில்,  ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் படத்தை காண ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது பட வெளியீட்டிற்கும் ஆதரவு பெருகியுள்ளதைக் நம்மால் காண முடிகிறது. இந்த சூழலில் படம் ஜூலை 18-ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகப்போகிறது  என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களில் ‘தியா தியா’ எனும் பாடல் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி, பலரது கவனத்தையும் மனதையும் ஈர்த்தது. நிவாஸ் இசையில் வெளியான அந்த பாடல் இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, அதன் தொடர்ச்சியாக, படத்தின் மூன்றாவது பாடலான 'காஜுமா' எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பாடலை, நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் விறுவிறுப்பாக வளர்ந்து வரும் பாடகி அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். காதல், சந்தோஷம் மற்றும் உற்சாகம் கலந்து உருவாக்கப்பட்ட இந்த பாடல், அதன் இசை, வரிகள் மற்றும் காட்சிகளின் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலின் வீடியோ காட்சிகள் யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் பாராட்டுகளை பெற்றுவரும் நிலையில், ரசிகர்கள் “இந்த பாடல் காதலர் தினத்துக்கு கூட பொருத்தமாக இருக்கும்” எனும் வகையில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். காட்சிகளிலும், ஒளிப்பதிவிலும், நடிப்பிலும் படக்குழுவின் முயற்சிகள் வெளிப்படையாக தெரிகின்றன. குறிப்பாக, ராஜு ஜெயமோகன் மற்றும் ஆத்யா பிரசாத் ஆகியோரின் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி இந்த பாடல் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. மேலும் படத்தின் இயக்குநர் ராகவ் மிர்தாத், தனது முதல் படமான இந்த படத்தை மிக துல்லியமாகவும் அனைவரும் கவரும் வண்ணம் படைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கதை, வசனம், காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் என அனைத்தையும் உள்ளடக்கிய இத்திரைப்படம், குடும்பம், நட்பு, காதல் ஆகியவற்றை ஒரு சுவையான கண்ணோட்டத்தில் கொண்டு செல்லும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இசைஞானி பாடலை தொட்டாலே ஷாக் தான்.. ரிலீசான இன்றே வந்த சிக்கல்.. தலையை பிய்த்து கொள்ளும் வனிதா..!

மேலும், 'பன் பட்டர் ஜாம்' என்பது தனது பெயருக்கேற்ப ஒரு இனிப்பு, மென்மையான அனுபவமாக அமைந்திருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு காட்டி வருகின்றனர். சமீபத்திய பாடல்கள் மற்றும் ட்ரைலர் காட்சிகள் இதற்கான அடையாளங்களாக விளங்குகின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பட விமர்சகர்களும் இந்த படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இப்படத்திற்கு இதுவரை வந்திருக்கும் பாராட்டுகளும், பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பும், ராஜு ஜெயமோகனுக்கு ஒரு வலுவான சினிமா ஆரம்பமாக அமையக்கூடும் என்ற  நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இவரது இயல்பு மற்றும் மனதைக் கட்டிக்கும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஒரு இடத்தை பெற்றிருப்பதால், திரைத்துறையிலும் அதனை தொடரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆகவே ஜூலை 18ஆம் தேதி வெளியாகும் 'பன் பட்டர் ஜாம்' திரைப்படம், இசையும் கதையும் கலந்த ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரபல யூடியூபர்.. 'டாட்டூ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share