மகனுக்காக தாய்ப்பாலில் தங்க நகை செய்த இந்திரஜா சங்கர்..! ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்..!
தனது மகனுக்காக தாய்ப்பாலில் தங்க நகை செய்து அணிவித்து இருக்கிறார் இந்திரஜா சங்கர்.
இந்திரஜா சங்கர், நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்பது மட்டுமல்லாமல் தனது உழைப்பால் உயர்ந்தவர் என்றும் சொல்லலாம்.இவர் விருகம் மற்றும் அட்லியின் பிகில் திரைப்படத்தில் நடித்திருப்பார். அதில் காமெடி நடிகர் விவேக் "பாண்டியம்மா வெறியான படுத்திடும் ஹரியானா" என இவரைக் குறித்து டயலாக் கூற, அதற்கு ஏற்றார்போல் ஒரே அடியில் ரெஃப்ரியை, ஏரில் பறக்க வைத்திருப்பார் இந்திரஜா.
இப்படியிருக்க, இப்படத்தின் காட்சியில் இவரை நடிகர் விஜய் "குண்டம்மா" என்று கூறியதாக பல மகளிர் சங்கங்கள் முதல் அநேக தரப்பினர் விஜயை குறை சொல்லி மன்னிப்பு கேட்கும் படி கண்டன கோஷங்களை கொட்டி தீர்த்தனர். ஆனால் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திரஜா சங்கர், அக்காட்சி நடித்து முடித்த உடனே, நடிகர் விஜய் பலமுறை தன்னிடம் 'மன்னிப்பு' கேட்டதாக கூறி அனைவரது வாயையும் அடைத்தார்.
இதையும் படிங்க: கச்சேரி பணம் ராணுவத்துக்குத்தான் ஆனா கச்சேரி மட்டும் இப்ப இல்லப்பா.. இளையராஜாவின் பிளான்..!
இந்த நிலையில் திடீரென நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது உடல் எடைகளை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். அது மட்டுமல்லாது வாழ்க்கையில் இனி யாரும் குடிக்காதீர்கள் தவறான பழக்கங்கள் எதுவும் வேண்டாம், அது உங்கள் உடம்பையும் வாழ்க்கையும் கெடுத்து விடும் என்று அனைவருக்கும் அறிவுரையும் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில், திருமணம் ஆன பொழுது நெட்டிசன்கள் பல தவறான கருத்துக்களையும் மனதை நோகடிக்கும் வகையிலும் பேசி வந்த நிலையில், அந்த நெகட்டிவிட்டி கமெண்ட்ஸ்கள் அனைத்தையும் பாசிட்டிவ் ஆக்கினார் இந்திரஜா சங்கர். இதனை தொடர்ந்து தற்போது அவர் ஆண் குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார். மேலும், சமீபத்தில் கமல்ஹாசன் கையால் தனது மகனுக்கு “நட்சத்திரன்” என்ற அழகிய பெயரை பெற்று அதிரடியான போட்டோ ஷூட்களை நடத்தி வெளியிட்டார்.
இந்த நிலையில், தற்போது தனது மகனுக்காக ஒரு ஸ்பெஷல் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார் இந்திரஜா சங்கர். அதாவது தனது மகனுக்காக தனது தாய்ப்பாலில் தங்க நகை ஒன்றை செய்துள்ளார். அதனை இணையத்தில் பதிவிட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினியை அலறவிட்ட கேரள ரசிகர்கள்..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசியம்..!