வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட ரகுல் பிரீத் சிங்..! புகைப்படங்களை வெளியிட்டு அசத்தல்..!

பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட ரகுல் பிரீத் சிங் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ரகுல் பிரீத் சிங் நடித்த பல படங்களில் கார்த்தியுடன் நடித்த திரன் மற்றும் தேவ் போன்ற படங்களை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக  "சின்ன சின்ன கண் அசைவில் உன் அடிமையாகவா" என்ற பாடலில் காதலையும், வெட்கத்தையும், தனது ஜோடியுடன் அழகாக காண்பித்து இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். 

பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ரகுல் பிரீத் சிங்கின் தந்தை ராஜேந்தர் சிங், ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். ஆதலால் தனது சிறுவதில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து முடித்து, பின் டெல்லி 'ஜீசஸ் மேரி பல்கலைக்கழகத்தில்' ஸ்டிரிக்ட் ஆபிசர்கள் மத்தியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். 

இதையும் படிங்க: ஷுட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகருக்கு விபத்து.. நடிக்க கூடாது என அறிவுறுத்திய மருத்துவர்கள்.. இனி என்ன செய்வாரோ..?

பின் வடிவழகியாக அவதாரம் எடுத்த ரகுல் பல போட்டிகளில் கலந்து வெற்றிகளை குவித்து, அதன் பின், சினிமாவில் நடிக்க வந்தார். இப்படி தனது வாழ்க்கை முழுவதையும் ஸ்டிக்ட்டாக கழித்த ரகுல், ஜாக்கி பக்னானியை திருமணம் செய்த பிறகு பல இடங்களுக்கு அவருடன் சென்று தனது வாழ்க்கையை இன்பமாக கழித்து வருகிறார்.

இதுவரை, மகிழ்திருமேனி இயக்கத்தில் 'தடையறத் தாக்க', ரவி தியாகராஜன் இயக்கத்தில் 'என்னமோ ஏதோ', ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் 'பிரம்மோற்சவம்', ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்', ஹச் வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று',ராஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் 'தேவ்', செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', ரவிக்குமார் ஆர் இயக்கத்தில் 'அயலான்', ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.

அதுமட்டுமல்லாமல், ரகுல் பிரித் சிங் தனது காதல் ஜோடியான ஜாக்கி பக்னானியை எங்கு அழைத்து சென்றாலும் கைகளை கோர்த்து கொண்டும், கட்டி அனைத்தபடியும், முத்தம் கொடுத்து அன்பை பகிர்வதும், நீச்சல் குளங்களில் ஒன்றாக குளிப்பதும் என பிசியாக தனது வாழக்கையை கழித்து வருவதுடன் அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பல இளசுகளின் இதயத்தை  கொள்ளை கொண்டு வருகிறார். 

இப்படி தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வரும் ரகுல், அவ்வப்போது தனது ஜோடியுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பலரது புகைச்சலுக்கு ஆளாகி வருவார். ஆனால் இன்று அவரது துணை எங்கு சென்றாரோ என தெரியவில்லை தனியாக இருக்கும் தனது கணவரை மயக்கும் விதமாக அழகான புகைப்படங்களை வெளியிட்டு அவரது கணவர் மற்றும் பல இளசுகளின் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

இதையும் படிங்க: காதல் கணவருடன் இறுக்கி அணைத்தபடி நடிகையின் க்யூட் கிளிக்..! ஒரே சிரிப்புதான் மொத்த நியூயார்க்கும் குளோஸ்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी