×
 

நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகமானார். பின் தமிழில் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். 

அதேபோல் ரஜினிமுருகன், பைரவா, நடிகையர் திலகம், சண்டைக்கோழி 2, சாமி 2 போன்ற படங்ககளில் நடித்து உள்ளார். 

இதையும் படிங்க: பாரம்பரிய முறைப்படி பட்டு பாவாடை அணிந்து கலக்கிய நடிகை மிருணாளினி ரவி..! இணையத்தில் பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

இதில் சண்டைகோழி 2 படத்தில் டிவிஎஸ் எக்ஸலை வீலிங் செய்து அனைவரது ட்ரோலையும் வாங்கி குவித்து பிரபலமானார். 

அதன் பின் சாமி 2 படத்தில் பிரபுவிற்கு மகளாக நடித்த இவர், "பெண்ணே உன்ன பாத்தா என் நெஞ்சிக்குள்ள டியூனு" என்ற பாடல் மூலம் பிரபலமானார். 

இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இவரது அழகை ரசிகர்கள் மனதில் பதியவைத்த படம் "ரஜினிமுருகன்". அதில் வரும் "உன் மேல ஒரு கண்ணு" பாடலின் காட்சிகள் தான் அவரது முகத்தை நெஞ்சில் பதியவைத்தது.  

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை' 15 வருடங்களாக காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவரது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரை பரபலங்கள் கலந்துகொண்டனர்.

  

இதனையடுத்து ஹனிமூனில் பிசியாக இருந்த கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். 

இதனை அடுத்து, பார்ட்டிகளுக்கும் தனது கணவருடன் ரியல் ஹீரோ, ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து, டான்ஸ் வைஃப் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: பாலியல் சீண்டல் செய்ததால் இயக்குநரை அடித்தேன்..! மலையாள நடிகை சிலங்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share