×
 

பாரம்பரிய முறைப்படி பட்டு பாவாடை அணிந்து கலக்கிய நடிகை மிருணாளினி ரவி..! இணையத்தில் பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நடிகை மிருணாளினி ரவியின் பாரம்பரிய பட்டு பாவாடை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

கண்களின் காந்த வார்த்தைகளால், இடையின் சொக்க வைக்கும் அழகால், முத்து போன்ற அழகிய சிரிப்பால், ஒவ்வொரு ரசிகர்களின் நெஞ்சை உறைய வைக்கும் இயற்கையே போற்றும் பேரழகி என்றால் அது நடிகை மிருணாளினி ரவி தான்.  

பாண்டிச்சேரியில் பிறந்த மிருணாளினி ரவி, பொறியியல் படிப்பை முடித்தவுடன் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் டப்ஸ் மேஷ், டிக் டாக் செய்து வந்தார். 

இதையும் படிங்க: பாலியல் சீண்டல் செய்ததால் இயக்குநரை அடித்தேன்..! மலையாள நடிகை சிலங்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

இவரது ரீல்சால் பெரிதும் கவரப்பட்ட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்து, 

தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக்கினார். பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய 'சாம்பியன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடிவந்தது. 

அதன் பின்னர் கடலகொண்ட கணேஷ் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் மிருணாளினி.

பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்த இவர், இதுவரை தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் என்ற படத்திலும், 

மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் ஜாங்கோ என்ற படத்திலும், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி என்ற படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்திலும், 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்திலும், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்..! திரை பிரபலங்கள் அஞ்சலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share