மணிரத்தினம் என் பொண்ணு விஷயத்தில் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல..! நடிகை குஷ்பூவின் பதிவு வைரல்..!
சுந்தர்.சி பொண்ணு விஷயத்தில் மணிரத்தினம் எடுத்த அதிரடி முடிவால் கலங்கி இருக்கிறார் நடிகை குஷ்பூ.
கண்களில் காதல் வசனம் பேசும் சுந்தர் சி மற்றும் குஷ்பூ தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வந்த காலத்தில் அவர்கள் தோற்றத்தை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்த இருவரும் தங்கள் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆளே மாறிவிட்டனர். அதிலும் அவந்திகா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமர் லுக்கில் மாறி அனைவரையும் வாயடைக்க செய்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் தனது இருமகள்களையும் சினிமாவில் நுழைக்க திட்டம் தீட்டிய குஷ்பூ அவந்திகாவை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்து தற்பொழுது அவர் ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.இவராய் தொடர்ந்து அடுத்த மகளான அனந்திகா, தற்பொழுது சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: Kushboo Photos: ஸ்டைலிஷ் லுக்கில்... செல்ஃபி புள்ளையாக மாறிய குஷ்பு!
தற்பொழுது பல எதிர்ப்புகள் மத்தியில், வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இப்படத்தை குறித்து பார்த்தால், உண்மையிலேயே இது கமலஹாசன் திரைப்படமா? அல்லது சிம்புவின் திரைப்படமா? என ரசிகர்களை கொழும்பும் அளவிற்கு படம் படுமாஸாக உள்ளது என அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அப்பா மகனுக்கு இடையே நடக்கும் அதிகார மோதல்களை குறித்த படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எப்படி செக்கச்சிவந்த வானத்தில் பிரகாஷ்ராஜ் இறப்புக்குப் பின்பு மூன்று மகன்களும் அந்த சீட்டைப் பிடிக்க அடித்துக் கொள்கிறார்களோ அதே போலத்தான் இப்படத்திலும் நடக்கிறது. தான் பாசமாக எடுத்து வளர்த்த மகனான சிம்புவின் கையாலேயே கமல்ஹாசன் மரணிக்கிறார். இப்படி இறந்தவர் மீண்டும் வருகிறாரா இல்லையா.. பழிவாங்குவாரா மாட்டாரா..? என்பது தான் கதை. இப்படிப்பட்ட படத்தில் மணிரத்தினதுடன் உதவி இயக்குனராக வேலை செய்த குஷ்பூவின் மகளான அனந்திகாவின் பெயரை படத்தின் டைட்டில் கார்டில் உதவி இயக்குனர் என போட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார் குஷ்பூ.
இதனை பற்றி அவர் தெரிவிக்கையில், " எனது மகளின் பெயரை இயக்குனர் மணிரத்னத்தினத்தின் படத்தில் அவரது உதவியாளர் பட்டியலில் பார்க்கும்போது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெருமிதமாக இருக்கிறது. எனது மகள் அவரது காலில் அடிபட்டு சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார். ஆனால் அதற்கு முன்பாக வரை சிறிது காலம் மட்டுமே அவர் தக் லைஃப் படத்தில் பணியாற்றி இருந்தார். இருப்பினும் மறக்காமல் அவளுடைய பெயரையும் டைட்டில் கார்டில் இடம்பெறச் செய்த மணி சாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இயக்குனர் மணிரத்தினத்திற்கு ஷாக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!