×
 

'மெட்ராஸ் மேட்னி' படம் எப்படி இருக்கு தெரியுமா..! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சால் மகிழ்ச்சியில் படக்குழு..!

அனைவரது பாராட்டையும் பெற்றுவரும் 'மெட்ராஸ் மேட்னி' படம் குறித்து பேசியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

200 கோடி 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படங்களை விட சிறு பட்ஜெட்டில் உருவாகி இருந்த டூரிஸ்ட் ஃபேமிலி, குடும்பஸ்தன் ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் குடும்பங்களிலும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இப்படிப்பட்ட தான அழகிய திரைப்படங்களை எடுத்தால் நாங்கள் மட்டுமல்ல குடும்பங்களும் இணைந்து வந்து படத்தை பார்க்க முடியும். ஆதலால் அப்படிப்பட்ட ஒரு படத்தை எடுங்கள் என வயதில் மூத்தவர்கள் அனேகர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட வேளையில் சிறு பட்ஜெட்டில் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஆகியோரின் நடிப்பில் அட்டகாசமாக வெளியாகி இருக்கக்கூடிய திரைப்படம் தான் 'மெட்ராஸ் மேட்னி'. மெட்ராஸ் மேட்னி என்று சொல்லும் பொழுதே நம் நினைவுக்கு வருவது மேட்னி ஷோ தான். இப்படி இருக்க திரைப்படம் எப்படி உள்ளது என்பதை கீழே பார்ப்போம். இத்திரைப்படத்தை குறித்து பார்க்கும் பொழுது, நடிகர் சத்யராஜ் ஒரு எழுத்தாளராக இருக்கிறார் அவர் எப்பொழுதுமே எழுதும் விதங்கள் சற்று மாறுபாடாகவே இருக்க, ஒரு பெண் அவரிடம் வந்து நீங்கள் இப்படி எல்லாம் எழுதுவதை விட மக்களைப் பற்றியும் சாதாரண மக்கள் படும் வேதனைகளை பற்றியும் எழுதுங்கள் அதுவே உங்களுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என அறிவுரை கூறி செள்கிறாள்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பிளான்... ரஜினியின் 'கூலி' படத்தில் அமீர்கான்.. கசிந்த உண்மை...!

மிகப்பெரிய எழுத்தாளரான சத்தியராஜ் அதற்காக எல்லாம் துளி கூட கவலைப்படாமல் அந்த பெண் சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொண்டு ஒரு மதுபாரில் காளி வெங்கட்டை சந்தித்து அவருடைய கதைகளை முழுவதுமாக கேட்கிறார். அப்பொழுது ஒரு தகப்பன் தனது குடும்பத்திற்காக எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார். பிள்ளைகள் அப்பாவை எப்படி பார்க்கிறார்கள், பெண் பிள்ளைகள் படித்திருந்தாலும் நன்றாக சம்பாதித்தாலும் இந்த சமூகம் அவர்களை திருமணம் செய்ய வரும் பொழுது அவர்களிடத்தில் என்ன பார்க்கிறார்கள், தாய் தகப்பனுக்கு இடையே உள்ள அன்புரீதியான காதல் என முழுக்க முழுக்க மிடில் கிளாஸில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் அழகாக விவரிக்கும் படமாக இந்த மெட்ராஸ் மேட்னி இருப்பதால் தற்பொழுது இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும், இப்படத்தின் வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பேசியிருந்த நடிகர் சத்தியராஜ், இப்படத்தை வெற்றி பெற வைத்த தமிழ் மக்களுக்கு மிக்க நன்றி. அழ வேண்டிய இடத்தில் அழுதார்கள் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்தார்கள், திருப்பூர் சுப்ரமணியம் சார், பட்டுபட்டுன்னு அவர் மேட்டரை போட்டு உடைத்து விடுவார். அவர் இந்த மெட்ராஸ் மேட்னி படம் ஹிட் என சொல்லி இருக்கிறாரு. அதுவே எனக்கு ரொம்ப சந்தோசம் தான். இந்த மாதிரியான படங்கள் ஓட ஆரம்பித்தால்,  கார்த்திகேயன் மாதிரி வித்தியாசமான கதைக்களம் வைத்துள்ள இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். இந்த படத்திற்கான வெற்றி வெறும் மெட்ராஸ் மேட்னிக்காக கிடைத்த வெற்றி மட்டும் அல்ல தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த வெற்றி இந்த வெற்றியை கொடுத்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்தார்.


தற்பொழுது அவரை தொடர்ந்து படத்தை பார்த்த பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், "இப்படத்தை பார்த்தேன் மிகவும் பிடித்து இருந்தது. காளி வெங்கட் அண்ணாவின் அனைத்து திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். 'கூலி' திரைப்படத்தின் மூலம் தான் அவரை இன்னும் அதிகமாக நான் புரிந்துக் கொண்டேன். அனைவரும் இப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரவு கொடுங்கள். அப்பொழுது தான் இந்த மாதிரியான திரைப்படங்கள் உங்களை மகிழ்விக்க தொடர்ந்து வரும்" என கூறினார்.

இதையும் படிங்க: ஜப்பானில் மாஸ் காட்டிய கமல்ஹாசனின் "விக்ரம்"..! இதுவரை வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share