மஞ்சு வாரியரை கண்ட இடத்தில் தொட்ட காமுகன்..! வீடியோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்..!
மஞ்சு வாரியரை கண்ட இடத்தில் தோட்ட காமுகனை வலைவீசி தேடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மலையாள சினிமாவின் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படுபவர் தான் மஞ்சு வாரியர். கலையுலகில் பல திறமைகளை தன் வசம் வைத்திருக்கும் மஞ்சு வாரியர், வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர். எப்படி அவர் நடிப்பில் ராட்சசியாக இருக்கிறாரோ அதே போல் பின்னணி பாடகராகவும், நடன ஆசிரியராகவும் இருப்பவர். கண் அசைவுகளில் பேசும் இவர் நடன ஆசிரியர் என்பதாலேயே வடிவழகியாக இருந்து பலரது இதயங்களை உடைத்து வருகிறார்.
இப்படி பட்ட மஞ்சு வாரியர், உண்மையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். 1978-ம் ஆண்டு செப்டம்பர் 10-ல் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் பிறந்தவர் இவர். இவர் நாகர்கோவில் பகுதியில் தனது பள்ளிப்படிப்பை படித்து கொண்டிருந்த பொழுது அவருடைய அப்பாவிற்கு பணியின் நிமித்தமாக கேரளாவிற்கு இடம் மாற்றம் செய்ததால் வேறு வழியின்று அங்கு சென்றவர் அப்படியே தங்கி மலையாள நடிகையாக மாறினார்.
இதையும் படிங்க: என்னவென்று சொல்வதமா ராசி கண்ணா பேரழகே..! ஒரே பதிவால் ரசிகர்களை மயக்கும் நடிகை..!
தனது கல்லூரி கால படிப்பின் பொழுது நடனம் ஆடி ஊர் முழுவதும் ஃபேமஸ் ஆன மஞ்சு, தனது நடன திறமையின் மூலம் 1995ம் ஆண்டு 'சாக்ஷ்யம்' என்ற மலையாள திரைப்படத்தில் முதன் முறையாக நடித்து மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தூர்தர்ஷன் என்னும் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'மொஹரவம்' என்னும் தொடரில் நடித்து மலையாள திரையில் உள்ள அனைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இப்படி புகழ் பெற்ற மஞ்சு வாரியர் 1995 முதல் 1999 ஆண்டுகள் வரை பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் திலீப் என்னும் மலையாள திரைப்பட நடிகரை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரைவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து சென்றார். பின்னர் 2014ம் ஆண்டு "ஹொவ் ஓல்ட் ஆர் யூ" திரைப்படத்தில் நடித்து மலையாள திரையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து 2019ம் ஆண்டில் தமிழி அசுரன் படத்தில் அடியெடுத்து வைத்த மஞ்சு வாரியர், தொடர்ந்து மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம், சென்டிமீட்டர், துணிவு, விடுதலை 2, வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் அன்பை பெற்றார்.
இப்படி புகழ் வாய்ந்த பெண்ணாக வலம் வரும் மஞ்சு வாரியர், இன்று ஒரு பிரமாண்டமான கடைதிறப்பு விழாவுக்கு சென்றதை போல் தெரிகிறது. அங்கு சென்று நிகழ்ச்சியை முடித்து விட்டு வீடு திரும்பிய அவரை பார்க்க கூட்டம் அலைமோத, ரசிகர்களை வேதனை படுத்தாமல் இருக்கவும் ஏமாற்றம் அடைந்து விட கூடாது என்பதற்காகவும் மஞ்சு அவர்களுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்தார்.
அவர் எந்த அளவுக்கு நாகரீகமாக இருந்தாரோ அதே அளவுக்கு மக்களும் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் அல்லவா. அந்த அளவிற்கு மஞ்சு வாரியர் தற்பொழுது சென்ற கடை திறப்பு விழாவில் செல்ஃபி எடுத்து கொண்டிருந்த பொழுது அவரது இடுப்பில் ஒருவர் கை வைப்பதும் மீண்டும் மஞ்சுவை தொட நினைப்பதும் மற்றொருவர் கேமராவில் பதிவாகி வெளியாக தற்பொழுது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜே சித்து இயக்கும் புதிய படம்..! அனௌன்ஸ்மண்ட் வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்..!