ஏதோ.. அறியாப்புள்ள தெரியாம பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்கப்பா..! நடிகை மிருணாள் தாகூர் வருத்தம்..!
பிபாஷா பாசுவை விமர்சித்தது குறித்து மிருணாள் தாகூர் வருத்தம் தெரிவித்து இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது அழகு, நடிப்பு திறமை மற்றும் வசீகரமான ஸ்கிரீன் பிரசென்ஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் மிருணாள் தாகூர், தற்போது எதிர்பாராத வகையில் தான் பேசிய ஒரு பழைய வீடியோவால் சமூக ஊடக சர்ச்சையின் சிக்கி தவித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பிபாஷா பாசு குறித்து கூறிய கருத்துகள் இணையத்தில் மீண்டும் பகிரப்பட்டு, தீவிரமாகப் பரவி வருகின்றன. இதன் விளைவாக, மிருணாள் தாகூர் தற்போது தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலான ஒரு வீடியோவில், மிருணாள் தாகூர், பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவைப் பற்றி தவறாக கூறியதாக காணப்படுகிறது. அந்த வீடியோவில், "பிபாஷா பாசுவின் தசைகள் ஆண்களைப் போல இருக்கின்றன. அவரைவிட நான் சிக்ஸ்பாக்ஸ் இல்லாமலே அழகாக இருக்கிறேன்." என மிருனாள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சு அந்த காலத்தில் 19 வயதான டீன் ஏஜ் மிருணாள் தாகூரால் பேசப்பட்டது. ஆனால் தற்போது இந்தக் கருத்து மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி, பல ரசிகர்களிடமும், பெண்களிடமும் கடுமையான கோபத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளி வெளிவந்ததும், பல ரசிகர்கள் மிருணாள் தாகூரை கடுமையாக விமர்சித்து, அவர் கூறியதை உருவக் கேலி, பெண்ணை கீழ்த்தரமாக பேசும் தன்மை, உடலிய இயல்பை அடிப்படையாக வைத்த விமர்சனம் என கண்டித்தனர். முக்கியமாக, தற்போது வன்முறையற்ற பெண் ஹீரோயின் உருவாக்கம், உடலை ஏற்றுக்கொள்வது, பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற ஆரோக்கியமான அணுகுமுறைகள் பேசப்படும் இந்த காலகட்டத்தில், இவரது பழைய கருத்து பின்போக்கானது என்றும், அது பெண்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் பலர் சாடினர். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, மிருணாள் தாகூர் ஒரு நேர்காணலில் உண்மையான வருத்தத்துடன் தனது நிலையை விளக்கி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில்,"நான் அந்த பேச்சை 19 வயதில் ஒரு டீனேஜராக இருக்கும்போது பேசியேன். அப்போது எனக்கு வார்த்தைகளின் தாக்கம் எவ்வளவு தீவிரமென்று தெரியவில்லை. யாரையும் காயப்படுத்துவதும், உருவக கேலி செய்வதும் என் நோக்கமல்ல. நான் அப்போது விளையாட்டாக கூட சொல்லக்கூடாதது. ஒரு பெண் மற்றொரு பெண்ணை அவமானப்படுத்துவது சரியானது இல்லை. இப்போது எனக்குத் தெரிகிறது. அது ஒரு பெரிய தவறு. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் பிபாஷா மேடமிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். இந்த உண்மையான வருத்தமும், நேர்மையான மனப்பான்மையும் சமூக ஊடகங்களில் சிலரால் வரவேற்கப்பட்டு, முட்டாள்தனமான பேச்சை உணர்ந்து திருந்துவது முக்கியம் என கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. மேலும் பிபாஷா பாசு, 2000-களில் பாலிவுட் சினிமாவில் ஹாட் ட்ரெண்ட் நடிகையாக விளங்கியவர். ‘அஜ்னாபி’, ‘ராஅஸ்’, ‘நோ என்ட்ரி’, ‘கோர்’, ‘ஊம் கார்’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து, தன் அழகு மட்டுமல்ல, தைரியமான நடிப்புத் திறமையாலும் புகழ் பெற்றவர். உடற்பயிற்சி மீது அதிக அக்கறை கொண்டு, பாடி பாசிடிவிட்டி மற்றும் ஃபிட்னஸ்ஸின் முன்னோடியாக பல பெண்களுக்கு மோட்டிவேஷனாக திகழ்ந்தவர்.
இதையும் படிங்க: "இட்லி கடை" படத்தில் 'மினி இட்லி'யாக வரும் நடிகர்..! பார்த்திபன் பதிவு இணையத்தில் வைரல்..!
அவரது உடல் தசைகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டது, அவரது தன்னம்பிக்கை மற்றும் உடல் உழைப்பு மீது கேள்வி எழுப்புவதாக இருந்ததால், இது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இந்த விவகாரம் மீண்டும் ஒரு முறை உடலமைப்பு, அழகு, ஃபிட்னஸ் மற்றும் பெண்களுக்கு விதிக்கப்படும் அளவுகோல்கள் பற்றி பேசத் தூண்டியுள்ளது. சமூகத்தில் பெண்களின் உடலை விமர்சிப்பது, அவற்றை ;பிறருடன் ஒப்பிட்டு பாவிப்பது போன்ற செயல்கள் சுயநினைவு, மன அழுத்தம் போன்ற பல எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடியது. அந்த வகையில், ஒரு பிரபலமாக இருக்கும் மிருணாள் தாகூர், தனது பழைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டிருப்பது மட்டுமின்றி, அதனை மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாற்ற முடியும். ஆகேவ மிருணாள் தாகூர், இளம் வயதில் பேசிய தவறான கருத்துக்கு உண்மையுடன் வருத்தம் தெரிவித்ததன் மூலம், அவரின் மாற்றத்திற்கான விருப்பம் மற்றும் பொதுத்துணிவை வெளிப்படுத்தியுள்ளார். சமூகம் மாற்றம் எதிர்பார்க்கும்போது, அந்த மாற்றத்தை ஏற்பது மனிதனின் இயல்பு. ஒரு பிரபலமும், பெண்ணும், சமூக தாக்கம் ஏற்படுத்தக் கூடியவராகவும், அவருடைய மன்னிப்பு மற்றும் அறிந்த பின் திருந்தும் மனப்பான்மை பாராட்டத் தக்கது.
இது போன்ற நிகழ்வுகள், மற்ற பிரபலங்களுக்கும், பொதுமக்களுக்கும், தங்களது வார்த்தைகளையும், கருத்துகளையும் கவனமாக உபயோகிக்க வேண்டும் என்பதற்கான அடையாளமாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: திருமணம் முடிஞ்ச கையோடு வெயிட் கூடியாச்சு..! குறைக்க இத மட்டும் தான் செய்தேன் - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!