×
 

நடிக்கும் பொழுது தளபதி விஜய் என்ன செய்தார் தெரியுமா..! நடிகை ரம்பா பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை ரம்பா தளபதி விஜய் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தற்பொழுது அரசியலிலும், சினிமாவிலும் அதிகளவு கவனம் செலுத்தி வரும் இளைய தளபதி விஜய், தனது திரையுலகப் பயணத்தின் ஆரம்ப காலக் கட்டத்தில் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதில், 90களில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜோடிகளில் விஜய்க்கு மிகவும் பொருத்தமாக பார்க்கப்பட்ட ஜோடி என்றால் சிம்ரன், திரிஷா மற்றும் ரம்பா போன்றவர்களையே மக்கள் பெரும்பாலும் கூறுவர். அதிலும் முக்கியமானவராக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ரம்பா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த சில திரைப்படங்கள்  இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கின்றன.

அந்த வரிசையில் "நினைத்தேன் வந்தாய்" திரைப்படம் இன்றும் பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவையாகவே உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் தனியார் சேனலுக்கு நடிகை ரம்பா அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக “நினைத்தேன் வந்தாய்” திரைப்படத்தின் ஷூட்டிங் அனுபவங்கள் குறித்து அவர் கூறும் போது, விஜயை குறித்து நெகிழ்ச்சி பொங்க பேசினார். அதன்படி, ரம்பா கூறுகையில், " 'நினைத்தேன் வந்தாய்' படத்தில் ஒரு காட்சி உள்ளது. அதில் விஜய் சார் கனவு காணும் காட்சியில், நான் எங்கேயோ மேலே தொங்கிக் கொண்டிருப்பேன். அவர் எங்கேயோ நடனமாடிக் கொண்டிருப்பார். இந்த காட்சி எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் அதைவிட என்னை ஆச்சரியப்படுத்தியது, விஜய் சாரின் மனிதநேயம் தான். ஏனெனில் என் திரையுலக வாழ்க்கையிலேயே, முதல் முறையாகவே ஒரு கதாநாயகன் என்னிடம், "நான் லண்டன் போறேன். உங்களுக்கு ஏதாவது வாங்கி கொண்டு வரட்டுமா?' என்று கேட்டார்.

விஜய் சார் அப்பொழுது அந்தப் படத்தின் சில காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கும் பணிக்காக லண்டன் செல்ல இருந்தார். அவர் அப்படிச் சொல்லியபோது, அவர் நிஜமாகவே மனதளவில் பெரியவர் என்றும் அக்கறை கொண்டவர் என்பதும் எனக்கு அப்பொழுது தான் புரிந்தது. அந்த நேரத்தில் அவரிடம் நான் " நீங்கள் அனைவரையும் இவ்வளவு மரியாதையுடன் கையாளுகிறீர்கள், இது எல்லாம் நீங்கள் உண்மையிலேயே நினைத்துப் பேசுகிறீர்களா? இல்ல எப்படி' என கேட்டதற்கு அவர் சிரித்தபடி சென்றார். அதுமட்டுமல்லாமல், நான் இவ்வளவு நேர்மையான, பணிவான, அனைவரிடமும் மரியாதை கொண்ட ஒரு நடிகரை இதுவரை சினிமாவில் சந்தித்ததே இல்லை.

இதையும் படிங்க: 'தளபதி' இடத்தை பிடித்த 'குட்டி தளபதி'..! சினிமாவில் விஜய் பெற்ற சம்பளத்தை தன்வசப்படுத்திய நடிகர் 'SK'..!

அவர் வேலைக்கு வந்தாலும் முழுமையாக தயார் நிலையில் வருவார். ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் திறமையாக நடித்து சென்றுவிடுவார். வேலையில் அவருடைய பொறுப்புணர்வும், நடந்து கொள்ளும் விதமும் எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது," என்றார் ரம்பா. விஜய் மற்றும் ரம்பா இணைந்த சில திரைப்படங்களில், குறிப்பாக 'நினைத்தேன் வந்தாய்', 'வேட்டை', 'நினைத்தது முடிந்தது' போன்ற படங்கள் ரசிகர்களிடையே மாஸ் ஹிட் கொடுத்தது. அந்த காலத்தில் இவர்கள் இருவருக்குமான 'கெமிஸ்ட்ரி' மிகச் சிறப்பாக இருந்ததால் இவர்களது ஜோடி சேர்ந்தாலே மிகவும் கலக்கலாக இருக்கும் என்று அனைவரும் கூறுவர். மேலும், நடிகை ரம்பா தற்போது சினிமாவில் பிசியாக இல்லாவிட்டாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் ரசிகர்களுடன் நேரடியாக இன்றும் தொடர்பை வைத்துள்ளார். இந்த நிலையில் அரசியலில் விஜய் இறங்கி இருக்கும் இந்த நேரத்தில் அவரை குறித்த ரம்பாவின் பாசிட்டிவ் வார்த்தைகள், விஜயின் மீது மக்களுக்கு மேலும் மரியாதை சேர்த்துள்ளது என்றே சொல்ல முடிகிறது.

ஆகவே சினிமாவில் நற்பெயரை சம்பாரித்த விஜய் இனி வரும் காலங்களில் அரசியலிலும் நற்பெயரை சம்பாரிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


 

இதையும் படிங்க: மகனுக்கு 51வது பிறந்தநாள்.. சாய்பாபா கோவிலில் தாய் ஷோபா செய்த காரியம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share