×
 

ராமாயணம் படத்தில் களமிறங்கும் மண்டோதரி..! யாஷுக்கு துணை இந்த பலே நடிகையா..!

யாஷுக்கு துணையாக களமிறங்கிய பிரபல நடிகையை பார்த்து அசந்துபோயுள்ளனர் ரசிகர்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் ஒன்று மற்றும் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்த மாஸ் ஹிட் படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தினால் தென்இந்தியா முதல் வட இந்தியா வரை ஒருவரது புகழ் பரவியது என்றால் அதுதான் நவீன் குமார் கவுடா என்கின்ற யாஷ். இன்று பலரது கனவு நாயகனாக வலம் வரும் யாஷுக்கு, வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். 

இப்படிப்பட்ட யாஷ், திரையுலகில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான, கன்னட திரைப்படமான "ஜம்பதா ஹுடுகி" மூலம் அறிமுகமானவர். ஆனாலும் முதல் படத்தில் அவரை ஏற்று கொள்ளாத கன்னட ரசிகர்கள், 2008 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த "மொக்கினா மனசு" திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு ராஜதானி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி என பலப்படங்ககளில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார். 

இதையும் படிங்க: பிரபல இயக்குனர் படத்தில் விஷ்ணு விஷால்..! அதிரடி அப்டேட் கொடுத்த படக்குழு..!

இப்படி இருக்க கேஜிஎப் மூன்றாம் அத்தியாயத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர் யாஷ் இராமாயத்தின் படப்பிடிப்பில் இணைந்தது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தது. நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமானின் மிரட்டும் இசையில், நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய்ப்பல்லவி ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் தான் "ராமாயணம்". ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்,  நடித்து வரும் நிலையில் தற்பொழுது ராவணனாக நடிகர் யாஷும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கும்பகர்ணனாக பாபிதியோல், அனுமானாக சன்னி தியோல், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷோபனாவும் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் ராமாயணத்தின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் எடிட்டிங் எல்லாம் முடிந்து அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினாரால் கூறப்படுகிறது. மேலும், தற்பொழுது மும்பையில் படமாக்கப்பட்டு வரும் ராமாயணம் இரண்டாம் பாகத்தில் தான் நடிகர் யாஷ் ராவணனாக களம் இறங்கி நடித்து வருகிறார்.

இப்பொழுது நடித்து வரும் இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகார பூர்வமாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். அடுத்த இரண்டு வருட தீபாவளி இராமாயண கொண்டாட்டத்தில் சென்றாலும், கேஜிஎப் மூன்றாம் அத்தியாயத்தை மறந்து விடாதீர்கள் யாஷ் என ரசிகர்கள் கலங்கி வரும் வேளையில் அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளனர் படகுழுவினர். 

அந்த வகையில், ராவணனாக நடிக்கும் நடிகர் யாஷுக்கு ஜோடியாக களமிறங்கி இருக்கிறார் பிரபல தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால். அவர் இப்படத்தில் 'மண்டோதரி' என்கிற கேரக்டரில் நடிக்க இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் 'ராமாயணம்' படக்குழுவினர் நடத்திய லுக் டெஸ்டிலும், ஆடிஷனிலும் பாஸ் ஆனதால் இந்த மண்டோதரி கேரக்டர் அவருக்கு கொடுக்கப்பட்டதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தரிசனம் பார்க்க ரெடியா..! மதராஸி பட அப்டேட் கொடுத்து அசரவைத்த படக்குழு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share