தியேட்டரில் படம் பாருங்க.. திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்க்காதீங்க..! சூரி காட்டம்..!
புதுப்படம் வந்த உடனே திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும் நடிகர் சூரி கோரிக்கை விடுத்துள்ளார்.
'விடுதலை' படத்திற்கு பிறகு காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்ட சூரி, அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடு்த்து ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், கருடன் படத்தை தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ள படம் தான் 'மாமன்'. இந்த படம் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது படம் வெளியான அதே நேரத்தில் நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படமும் வெளியானதால் யாருடைய படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் கூறி கொண்டு இருக்க, தற்பொழுது பாக்ஸ் ஆபிசில் சந்தானத்தின் படத்தை விட, நடிகர் சூரியின் மாமன் படம் அதிக வசூலை பெற்றுள்ளது.
தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவை குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கைகளை குறித்தும், வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படம் உள்ளது என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். நன்றாக இருக்கும் அக்கா தம்பியின் உறவுகளுக்கு விரிசல் விட காரணமாய் அக்காவின் மகனே இருக்கிறார். ஆதலால் தனது தம்பியின் வாழ்க்கையை காப்பாற்ற தனது மகனையும் தம்பியையும் பிரிக்க அக்கா செய்யும் திட்டம் ட்யூஸ்ட்களிலேயே அல்டிமேட் ஆக இருந்தது.
இதையும் படிங்க: 'டிடி நெக்ஸ்ட் லெவலை' பின்னுக்கு தள்ளிய 'மாமன்'..! வசூலை அள்ளிய செண்டிமெண்ட் படம்..!
ஆனாலும் படத்தில் பாசங்கள் சற்று அதிகமாகவே இருக்கிறது என்றும் சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. படத்தில் காமெடி என்பது துளி கூட இல்லை. சண்டைக் காட்சிகள் எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை என ஒரு சில குறைகளை ரசிகர்கள் முன் வைத்து சென்றனர். சிலர் இது ரஜினியின் அண்ணாத்த திரைப்படமா? அல்லது சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படமா? என தெரியவில்லை என்று ரசிகர்கள் பரவலாக கூறி சென்றனர். ஆனாலும் இப்படத்தை பார்த்து கண்ணீர் சிந்தியபடி அனைவரும் சென்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், இனி சூரி நகைச்சுவை நாயகனா அல்லது கதாநாயகனா என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்க அதற்கான பதிலை கொடுத்துள்ளார் நடிகர் சூரி. அதன்படி அவர் அளித்த பேட்டியில், எல்லோரும் விரும்பிய படி 'மாமன்' படம் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. அதிலும் திரையரங்குகள் தரப்பில் இப்படம் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். கொஞ்சம் கூட படத்திற்கு மாறுபட்ட கருத்துகள் இதுவரை என் காதுகளில் எட்டப்படவில்லை. எனது ஆசையே வருடத்திற்கு ஒரு குடும்பம் சார்ந்த படங்களையாவது எடுக்க வேண்டும் என்பது தான். படம் பார்த்தவர்கள் அனைவரும் எல்லா குடும்பத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளனர்.
மேலும், காமெடியனாகா இருந்ததை அடுத்து கதாநாயகனாக நடித்தால் என்ன நடக்குமோ என பயந்தேன். ஆனால், கதாநாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்து கொண்டே இருக்கிறது. ஆதலால் நான் இனி நகைச்சுவை நாயகனாக இருக்க வேண்டுமா, அல்லது கதாநாயகனாக நடிக்க வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்யட்டும். மக்களுடைய வரவேற்பு இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடக்காது. கதாநாயகனாக தற்போது நடிக்கும் வாய்ப்புக்கு இடையூறு இல்லாமல் பெரிய நடிகருடன் நகைச்சுவை வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். சமூக வலைதளங்களில் புதுப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியாகும்போது அதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
நல்ல படங்களை பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் படம் எப்படி வரும், மக்கள் வரவேற்பு கொடுப்பார்களா என கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கும்போது, தவறான முறையில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடும்போது அது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே மக்கள் இதை வரவேற்க கூடாது என்றார்.
இதையும் படிங்க: மண்சோறு சாப்பிட்டா படம் ஓடுமா..? விளாசிய சூரி.. பாராட்டிய வைரமுத்து...!